உங்களோட போட்டோ வராம யோகா டேவே முழுமை பெறாதே!.. பூனம் பஜ்வானா சும்மாவா!..

Published on: August 8, 2025
---Advertisement---

சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதலே பிரதர் மோடி முதல் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என அனைவரும் யோகாசனங்களை செய்து வித விதமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால், ரசிகர்களின் இன்ஸ்டாகிராம் கனவுக்கன்னியான பூனம் பஜ்வா வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் யோகா தினத்தை முன்னிட்டு வளைந்து நெளிந்து யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு இதுவரை அவரை இன்னமும் காணவில்லையே என ஏங்கிய ரசிகர்களுக்கு இரவு நேர தூக்கத்தை கெடுக்கும் விதமாக சில யோகா போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பூனம் பஜ்வா, ஜீவாவுடன் இணைந்து நடித்த தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்கள் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே நண்பர் ஒருவரை காதலித்து வருவதாக போட்டோக்களை வெளியிட்டார்.

ஆனால், 40 வயதாகியும் இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே சுற்றி வருகிறார். அரம்பத்தில், அழகான யங் ஹீரோயினாக வலம் வந்த பூனம் பஜ்வா, சுந்தர். சி உடன் இணைந்து முத்தின கத்தரிக்காய் படத்தில் நடித்து ஆன்ட்டி ஹீரோயினாக மாறிவிட்டார்.

தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு, நான் இன்னமும் சின்ன பொண்ணுதான் என்றே ஷோ காட்டி வருகிறார்.

நடிகை கிரண் போல இவருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர். யோகா தினத்தை முன்னிட்டு தற்போது பிங்க் நிற ஜிம் உடையை அணிந்துக் கொண்டு வளைந்து நெளிந்து யோகா செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment