மம்மி பட வில்லி போல மாறிய சமந்தா!.. பசங்களோட தூக்கமே காணாம போயிடுமே!..

Published on: August 8, 2025
---Advertisement---

நடிகை சமந்தா தயாரிப்பாளராக தன் பயணத்தை சுபம் படம் மூலம் தொடங்கினார். அப்படம் சமீபத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. சமந்தாவிற்கு சில காலமாக பட வாய்ப்புகள் குறைந்திருந்த நிலையில் தற்போது பங்காராம் மற்றும் Rakt Brahmand: The Bloody Kingdom போன்ற படங்களில் அவர் நடிப்பார் என எதிர்பார்கப்படுகிறது.

சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பாணா காத்தாடி, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி, 24 உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து 15 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளார். மையோசிடிஸ் என்ற உடல்நலப் பிரச்சனையால் சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்த அவர் தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

சமந்தா ’டேக் 20’ என்ற புதிய பாட்காஸ்ட் சேனலை தொடங்கியுள்ளார். அதில் உடல்நலம், மனநலம் மற்றும் வாழ்க்கை முறை பற்றி பேசி வருகிறார், இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அவர் தனது உணவு முறையை மாற்றி, பிளட் சுகர் அளவைக் கட்டுப்படுத்துவது குறித்து பேசியிருந்தது பாராட்டப்பட்டது.

சமீபத்தில் சமந்தாவின் பள்ளி மார்க் சீட் சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்தது, அதற்கு அவர் கியூட்டான ரியாக்ஷன் கொடுத்திருந்தார். மேலும், தற்போது அவர் மம்மி படத்தில் வரும் வில்லி நடிகையை போல் உடை அணிந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். சமந்தாவின் ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment