சைடு வாக்குல காத்து வாங்கும் சமந்தா!.. என்ன ரெண்டு பக்கமும் ஓபனா இருக்கு!.. பசங்க ரொம்ப பாவம்!..

Published on: August 8, 2025
---Advertisement---

சமீப காலமாக நடிகை சமந்தாவிற்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் மும்பையில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சைடு முழுக்க ஓபனான டிசைன் கொண்ட கவர்ச்சி உடையை அணிந்து கலந்துக்கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

நடிகை சமந்தா கௌதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் ஏ மாயா சேஸாவே படங்களின் மூலம் அறிமுகமானார். ஏ மாயா சேஸாவே படத்தில் ஜெஸ்ஸி என்ற கதாபாத்திரத்தில் நடித்தற்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்ஃபேர் விருதையும் வென்றார்.

சமந்தா 2017-இல் நடிகர் நாகார்ஜூனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு 2021-இல் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தும் செய்து பிரிந்தார். அதையடுத்து நாக சைத்தன்யா நடிகை சோபிதா துலிபாலாவை இரண்வதாக திருமணம் செய்துக்கொண்டார்.

மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சமந்தா, தற்போது மீண்டு வந்து படங்களில் நடித்து வர முயற்சித்தும் பட வாய்ப்புகள் அளிக்க யாரும் தயாராக இல்லை. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சமந்தா மேடையில் கண் கலங்கியதற்கு வெளிச்சத்தில் நின்றதால் தான் கண் கலங்கியது, மேலும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நிற்க முடியாது என கூறியது அவரை படத்தில் கமிட் செய்ய யோசிக்க வைத்துள்ளது.

மேலும், சமந்தா தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகப்படுத்தி அதில் “பங்காரம்” என்ற திரைப்படத்தை தயாரித்து கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளார். பட வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் சமூக வலைத்தளத்தில் படு ஆக்டிவாக உள்ளார் சமந்தா. சினிமாவிற்கு வந்து 15 ஆண்டுகள் ஆனதை கொண்டாடியது, ஈசாவில் தியானம் செய்வது போன்ற பல நிகழ்வுகளை பகிர்ந்து வரும் நிலையில் தற்போது மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சைடு கட் டிசைன் கொண்ட உடையில் மிக கவர்ச்சியாக கலந்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment