குழந்தை மனம் மாறாத கங்குவா பட நடிகை!.. சம்மருக்கு இதை விட ஏத்த டிரெஸ் ஏதுமில்லையாம்!..

by SARANYA |
குழந்தை மனம் மாறாத கங்குவா பட நடிகை!.. சம்மருக்கு இதை விட ஏத்த டிரெஸ் ஏதுமில்லையாம்!..
X

திஷா பதானி இன்ஸ்டாகிராமில் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை கொண்டிருக்கும் நிலையில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களை மேலும், அதிகரித்து வருகிறார். லேட்டஸ்ட்டாக மஞ்சள் நிற பிகினி அணிந்துள்ள புகைப்படங்களை ஷேர் செய்து கோடை கொண்டாட்ட மன நிலைக்கு ரசிகர்களை கொண்டு சென்றுள்ளார்.

திஷா பதானி 2015ஆம் ஆண்டு தெலுங்கில் வருண் தேஜாவுடன் இணைந்து லோஃபர் திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். இவர் இந்தி திரைப்படங்களில் அதிகம் நடித்து வந்தாலும், சமீபகாலமாக தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.


நடிகை திஷா பதானி எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் நடித்து பாலிவுட்டில் புகழ் பெற்றார். மேலும், திஷா பதானி குங் ஃபூ யோகா, பாகி 2, பாரத், மலங், கல்கி 2898 ஏடி, கங்குவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


திஷா பதானி தனது நடிப்பு, கவர்ச்சியான தோற்றம் மற்றும் சமூக வலைதள பிரபலத்தால் இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார். மேலும், பல பிராண்டுகளுக்காக மாடலிங் செய்து வருகிறார். இதையடுத்து திஷா பதானி பாலிவுட்டில் மலங் 2, வெல்கம் டு தி ஜங்கிள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.


சமூக வலைத்தளத்தில் படு ஆக்டிவாக இருந்து வரும் திஷா பதானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சள் நிற பிகினியுடன் உள்ள ஹாட் புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சம்மருக்கு இப்படித்தான் குழந்தை போல திரிய வேண்டும் என ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

Next Story