நாக சைதன்யா மனைவி சோபிதா சோலோவா எங்கே போயிருக்காருன்னு பாருங்க!.. நல்ல ரசனைக்காரி தான்!..

by SARANYA |
நாக சைதன்யா மனைவி சோபிதா சோலோவா எங்கே போயிருக்காருன்னு பாருங்க!.. நல்ல ரசனைக்காரி தான்!..
X

நடிகை சோபிதா துலிபாலா நாக சைத்தன்யாவுடன் ஹைதராபாத் வெகேஷனை கழித்துவிட்டு தற்போது தனியாக ஏதோ ஒரு கிராமத்தில் இயற்கையுடன் கலந்து ரசித்து வரும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.


நடிகை சோபிதா துலிபாலா இந்தி திரைப்படமான ராமன் ராகவ் 2.0 மூலம் நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தெலுங்கில் கோடாச்சாரி, மேஜர், மலையாளத்தில் மூத்தோன், குரூப் போன்ற படங்களிலும் இந்தியில் மேட் இன் ஹெவன், தி நைட் மேனேஜர் வெப் சீரிஸ்களிலும் நடித்து புகழ் பெற்றார். மேலும், ஹாலிவுட்டில் மங்கி மேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.


மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் I மற்றும் பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டுவம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


நடிகர் நாக சைத்தன்யாவின் இரண்டாம் மனைவியான சோபிதா துலிபாலா சமீபத்தில் நடைபெற்ற அகில் அக்கினேனி திருமணத்தில் அவர் அணிந்திருந்த உடைகள் பலரையும் ஈர்த்தது.


தற்போது சோபிதா தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமப்புற இடத்திற்கு பயணம் செய்து, "Moments in the Sun " என்ற தலைப்பில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கேமராவுடன் இயற்கையை ரசிப்பது போலவும், அங்கு வாழும் மக்களுடன் பழகுவதையும், இயற்கையுடன் இணைந்திருப்பதையும் வெளிப்படுத்தும் விதமாக இருந்தது. மேலும், அந்த வாழ்க்கையை விரும்புவதாக பதிவு ஒன்றையும் பதிவிட்டிருந்தார். சோபிதாவின் இந்த பதிவு பல லைக்குகளையும் வியூஸ்களையும் பெற்று வைரலாகி வருகிறது.

Next Story