More
Categories: Cinema History Cinema News latest news

காந்திமதி கல்யாணம் பண்ணாமல் போனதன் காரணம் இதுதானாம்!.. நீங்க நினைச்ச மாதிரிலாம் இல்ல!

தமிழ்த்திரை உலகில் கிராமத்து குணச்சித்திர வேடத்தில் பாட்டி என்றாலே அதற்குப் பொருத்தமானவர் நடிகை காந்திமதி தான். இவரது சமகால கட்டத்தில் நடிகை மனோரமா பல படங்களில் நகைச்சுவை நடிப்பிலும் சரி, குணச்சித்திர வேடத்திலும் சரி. வெளுத்து வாங்கினார்.

இதையும் படிங்க… ஒரே ஒரு சிகரெட்!.. முள்ளும் மலரும் பட வாய்ப்பை தட்டி தூக்கிய ரஜினி.. இவ்ளோ விஷயம் நடந்திருக்கா?

Advertising
Advertising

மனோரமா பல படங்களில் வெற்றிகரமாக நடித்து வந்தாலும் காந்திமதியின் நடிப்பு அவரிடமிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவே இருந்தது. 16வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியின் அம்மா குருவம்மாவாக வந்து நம் மனதை நிறைத்து விடுவார். படத்தில் கமல், ஸ்ரீதேவி, ரஜினிக்குப் பிறகு இவரது நடிப்பு தான் பேசப்பட்டது.

வாயில் வெத்தலையைக் குதப்பிக் கொண்டு அடியே… என ஆரம்பித்து இவர் பேசும் சொலவடைகள் எல்லாம் விழுந்து விழுந்து சிரித்தபடியே ரசிக்க வைப்பவை. பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் இவரது அடுத்தடுத்த படங்களுக்கான வாய்ப்பைப் பெற்றுத்தந்தது. 80களில் இவர் நடித்த அத்தனை படங்களும் சூப்பர்ஹிட் தான். சிவாஜியுடன் இவர் நடித்த முதல் மரியாதை படமும் ரொம்பவே நம்மை ரசிக்க வைத்தது.

இந்தப்படத்தில் அவர் பேசும் வம்படியான வசனங்கள் கிராமிய மணம் கமழும் வகையில் இருக்கும். இது தாய்க்குலங்களைப் பெரிதும் கவருவதாக இருந்தது.

காந்திமதிக்கு மனோரமா அளவுக்கு தனக்கு பெயர் வரவில்லையே என்ற சோகம் கடைசி வரை இருந்து வந்ததாம். இவர் நடித்த முதல் படம் ஜோசப் தலியத்தின் இயக்கத்தில் வெளியான இரவும் பகலும். இதுதான் ஜெய்சங்கருக்கும் அறிமுக படம்.

இதையும் படிங்க… மூணு மாசம் ஒன்னா இருக்க முடியல! எப்படி இவன்கூட குடித்தனம் நடத்த முடியும்? வாயாலேயே வைலன்ஸ கக்கிய விசித்ரா

எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான மாந்தோப்பு கிளியே படத்தில் காமெடியில் பின்னி பெடல் எடுத்து இருந்தார் காந்திமதி. சுருளிராஜனுடன் ஜோடி சேர்ந்து இவர் செய்யும் காமெடி படத்தை வெற்றிபெறச் செய்தது. இவருக்கு ஒரு கட்டத்தில் சினிமா மார்க்கெட் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. அப்போது மைடியர் பூதம், கோலங்கள் என்று டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

சினிமாவிலேயே தொடர்ந்து கவனம் செலுத்திய காந்திமதியால் சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது. அதனால் தான் அவரால் கடைசி வரை திருமணம் செய்யாமலேயே போய்விட்டது.

Published by
sankaran v

Recent Posts