அந்த இடத்துக்கு மனைவி செட் ஆக மாட்டா!..இளம் நடிகையை அதுக்கு அழைத்த பிரபல நடிகர்!...
சினிமாத் துறையில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற சொல் பரவலாகவே பேசப்பட்டு வருகிறது. சினிமா மட்டுமில்லாமல் எல்லா துறைகளிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற வார்த்தையை தாண்டி தான் எல்லா வேலைகளும் நடக்கின்றது.
ஆனால் நாம் பெருமளவு கேட்பது சினிமாவில். முன்னுக்கு வரவேண்டும் என துடிக்கும் இளம் நடிகைகள் தங்கள் வாழ்க்கையில் அதிகமாக இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு தான் தாங்கள் அடைந்த இலக்கை அடைய வேண்டியிருக்கிறது. அவர்களாக இல்லாவிட்டாலும் மற்றவர்களால் தள்ளப்படுவதும் நடக்கின்றன.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் மங்கலபுரம், டோரா, சாயா போன்ற ஏராளமான படங்களில் துணை நடிகையாக நடித்தவர் நடிகை காயத்ரி ரேமா. இவர் தான் தான் பட்ட அனுபவங்களை சோஷியல் மீடியா மூலம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
இவரிடம் சில இயக்குனர்கள் தொட்டு அட்ஜெஸ்மெண்ட் பற்றி எல்லாம் கேட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.மேலும் திருமணமான ஒரு பிரபல நடிகர் ஒரு பெரிய படத்தின் ஆடியோ லாஞ்சுக்கு செல்லும் போது தனியாக தான் போகிறேன். நீயும் வரியா என்று கேட்டிருக்கிறார். அதற்கு காயத்ரி ஏன் உங்க மனைவியை அழைத்துக் கொண்டு போங்க என கூறியிருக்கிறார். அங்கெல்லாம் மனைவி செட் ஆக மாட்டா. நீ வந்தால் சும்மா ஜாலியாக போயிட்டு சுற்றி விட்டு வரலாம் என்று சொன்னாராம்.