Cinema News
ஒரு பொண்ணுன்னு கூட பார்க்க மாட்டாங்க!.. படப்பிடிப்பு பரிதாபங்களை அம்பலப்படுத்திய காயத்ரி!..
18 வயசு, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, சூப்பர் டீலக்ஸ், விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் காயத்ரி சங்கரின் சமீபத்திய போல்டான பேட்டி வைரலாகி வருகிறது.
ப்பா.. என விஜய்சேதுபதி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் காயத்ரியை கலாய்த்த காட்சிகள் தான் காயத்ரி என்றதும் உடனடியாக ரசிகர்கள் மனதில் ஒட்டிக் கொள்ளும்.
கடந்த ஆண்டு வெளியான கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் ஃபகத் ஃபாசிலுக்கு ஜோடியாக நடித்த காயத்ரியை அதே விஜய்சேதுபதி கழுத்தை அறுத்துப் போட்டிருக்கும் காட்சிகள் ரசிகர்களை பதை பதைக்க வைத்தன.
வித்தியாசமான நடிப்பு:
ஒரு படத்தில் பார்த்தால் பக்கா கிராமத்து பெண்ணாக இருக்கும் காயத்ரி, இன்னொரு படத்தில் அப்படியே சிட்டி கேர்ளாக மாறியிருப்பார். ரம்மி, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், மாமனிதன் உள்ளிட்ட படங்களில் ஹோம்லி லுக்கில் ரசிக்க வைத்த காயத்ரி, ரியல் லைஃப்பில் தான் ஹோம்லி கேர்ளே கிடையாது என்றும் சமீபத்தில், தனது ஒரிஜினல் இமேஜை வெளிப்படுத்தவே காது அருகே பூப்போட்ட கட்டிங்கை செய்துக் கொண்டு டாம் பாய் லுக்கில் காட்சியளித்து வருகிறார்.
இதற்காக ஏகப்பட்ட ட்ரோல்களை தான் சந்தித்ததாகவும், உங்கள் பார்வை வேறாக உள்ளது. படங்களில் எப்படி நடிக்கிறோமோ அதே போலத்தான் நடிகர்கள் ரியல் லைஃப்பில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லையே என்று அந்த பேட்டியில் பேசியுள்ளார் காயத்ரி.
ஒரு பாத்ரூம் கூட இருக்காது:
சினிமாவில் ஒரு விஷயத்தை மாற்ற வேண்டும் என்றால், எதை மாற்ற நீங்க விரும்புறீங்க என்கிற கேள்விக்கு பதில் அளித்த காயத்ரி, இந்த விஷயம் எனக்கே நடந்திருக்கு, ஷூட்டிங்கில் ஒரே ஒருத்தர் தான் பொண்ணு, மத்தவங்க எல்லாம் ஜென்ட்ஸா இருந்தா, ஒரு பாத்ரூம் அரேஞ்ச் பண்ணக் கூட மாட்டாங்க.. பெண்களுக்குத் தேவையான பிரைவேஸி மற்றும் சேஃப்டியை ஷூட்டிங் ஸ்பாட்டில் கூடுதல் கவனத்துடன் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
காரிலேயே டிரெஸ் மாத்த சொல்லுவாங்க:
ஒரு லொகேஷனில் இருந்து இன்னொரு லொகேஷனுக்குப் போய்க் கொண்டிருக்கும் போது, திடீரென பாதி வழியிலேயே எதையாவது பார்த்து பிடித்துப் போய் விட்டால், இங்கேயே ஒரு மான்டேஜ் சீன் எடுத்துருலாம் என சொல்லி விட்டு, காரிலேயே டிரெஸ் மாத்த சொல்லுவாங்க, அட்லீஸ்ட் நடிகைகளுக்கு ஒரு சின்ன ரூமாவது இருந்தாதான உடை மாற்ற முடியும் அதைக் கூட சில பட நிறுவனங்கள் புரிந்துக் கொள்ளாது ரொம்பவே மோசமான விஷயமா இருக்கு என காயத்ரி அந்த பேட்டியில் படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களை ஓபனாக பேசியுள்ளார்.