முதல் படத்திலேயே இயக்குனரை ஓட விட்ட ரஜினி பட நடிகை!..அடுத்து நடந்த சம்பவம் இருக்கே?..
1978 ஆம் ஆண்டில் ரஜினி மற்றும் ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘பைரவி’. இந்த படத்தில் நடிகை கீதா முதன் முதலில் அறிமுகமானார். மேலும் நடிகர் ஸ்ரீகாந்த் இந்த படத்தில் வில்லனாக நடித்தார். பைரவி திரைப்படத்தை அந்த கால இயக்குனர் ஸ்ரீதரின் வழியில் வந்த கே.பாஸ்கர் என்பவர் இயக்க கலைஞானம் இந்த படத்தை தயாரித்தார். படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால் கொஞ்சம் விட்டிருந்தால் படப்பிடிப்பு நடக்காமலேயே பாதியிலேயே விடப்பட்டிருக்கும்.
நடந்த சம்பவம் அப்படி. நடிகை கீதா முதலில் நடிக்கும் படம் என்பதால் அவருக்கு கொடுக்கப்பட்ட நான்கு வரி வசனத்தை கூட அவரால் சொல்லமுடியவில்லையாம். மிகவும் திணறியிருக்கிறார். சொல்லப்போனால் பைரவி என்ற படத்தின் தலைப்பில் தான் அவரின் கதாபாத்திரம் அமைந்திருக்கும்.
இயக்குனர் எவ்ளோ சொல்லியும் கீதாவால் முடியவில்லையாம். உடனே டென்ஷனான கே.பாஸ்கர் பேக் அப் செய்து படப்பிடிப்பை ரத்து செய்ய தயாராகி விட்டார், இதனால் பரிதவித்த தயாரிப்பாளர் கலைஞானம் கீதாவை வசனம் சொல்ல பழகி கொடுத்திருக்கிறார். நான்கு வரி வசனத்தை இரண்டு வரி இரண்டு வரியாக சூட் செய்து படத்தை எடுத்து முடித்திருக்கின்றனர். ஆனால் இதே கீதா தான் பின்னாளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என நடிப்பில் தேறியவராக மாறியிருக்கிறார். கேரளாவில் சிறந்த நடிகையாக ஆசியாவின் மிக உயரிய விருதான கோப்பையை வென்றிருக்கிறார் கீதா.