கியூட் ஹீரோயின் ஜெனிலியாவுக்கு பாய்ஸ் பட வாய்ப்பு கிடைத்தது எப்படி? இவரது கணவர் யார் தெரியுமா?
எந்தப்படத்தில் நடித்தாலும் மறக்க முடியாமல் செய்துவிடுவார் அந்தக் கேரக்டரை. அவர் தான் ஜெனிலியா. தமிழில் சில படங்களே நடித்தாலும் அனைத்திலும் தூள் கிளப்பியிருப்பார். இவரது துறுதுறு நடிப்பை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. இவரைப் பற்றிய சில குறிப்புகளைப் பார்ப்போம்.
இவரது இயற்பெயர் ஜெனிலியா டிஸ்சோஸா. இவருடைய பிற பெயர்கள் ஜீனு, ஹரிணி. தற்போது தனது கணவர் பெயரையும் சேர்த்து ஜெனிலியா தேஷ்முக் ஆனார். இவர் ஆக.5, 1987ல் மும்பையில் பிறந்தார். இவரது தாயார் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்தார்.
தனது மகளின் ஆசைக்காக தான் செய்து கொண்டிருந்த பணியையே துறந்துவிட்டு தனது மகள் நடிக்கும் சூட்டிங்கிற்கு சென்றுள்ளார். இவரது தந்தை டாடா கன்சல்டன்சியில் சீனியர் ஆபீசர். இவர் ஒரு அப்பர் மிடில் கிளாஸ் பேமிலியைச் சேர்ந்தவர்.
இவரது முதல் படம் துஜே மேரி கசம். இந்தப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார். ஆனால் இந்தப் பொண்ணைத் தான் ஹீரோயினாப் போடணும்னு டைரக்டர்ஸ் டீம் ரெண்டு மாசமா கால் பண்ணி கால்ஷீட் வாங்கியிருக்காங்க.
அப்போது ஜெனிலியா கூட இந்தப்படத்தோட தெலுங்கு வெர்ஷனைப் பார்த்து விட்டுத் தான் ஓகே சொல்லியிருக்கிறார். அதே வருடத்தில் டைரக்டர் ஷங்கருக்கு இவரை பார்க்கர் பென் விளம்பரத்தில் பார்த்துத் தான் பிடித்துள்ளது. அதனால் தான் சினிமா வாய்ப்பைக் கொடுத்தார். அதுதான் பாய்ஸ் படம்.
ஆனால் இவர் அந்த ஆடிஷனில் 300 பெண்களைத் தாண்டி இவர் செலக்ட் ஆகியிருக்கிறார்.
காலேஜ் படிக்கும்போதே இந்த பார்க்கர் பென் விளம்பரத்தில் நடிகர் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்துவிட்டார்.
தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளிலும் நடித்தார். தெலுங்கில் சத்யம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
2006ல் பொம்மரில்லுங்கற தெலுங்கு படம் இவருக்கு கோல்டன் நந்தி விருதைப் பெற்றுக் கொடுத்தது. இதுதான் தமிழில் சந்தோஷ் சுப்பிரமணியம் படமானது.
இந்தப்படம் வெளியான புதிதில் கல்யாணத்துக்கு என்றால் சந்தோஷ் சுப்பிரமணியம் மாதிரி ஒரு பொண்ணு வேணும் என இளைஞர்கள் கேட்டனர். விஜய் உடன் இவர் நடித்த சச்சின் படம் மறக்க முடியாது. அவ்ளோ கியூட்டான கேர்ளாக வந்து ரசிகர்களைக் கிறங்கடிப்பார்.
கடைசியாக இவர் நடித்த படம் வேலாயுதம். இந்தப்படத்தில் ஒரு பத்திரிகையாளராக வந்து அசத்துவார். அதன்பிறகு ஒரு சில படங்களில் கேமியோ ரோல் தான் பண்ணினார். அதன்பிறகு சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டார்.
மராத்தியில் தனது கணவர் ராகேஷ் உடன் ஒரு படம் நடித்துள்ளார். ஜெனிலியாவின் முதல் படத்தோட ஹீரோ ரிதேஷ் தேஷ்முக். முதலில் இவர் ஜெனிலியாவிடம் ஹாய் என்று மட்டுமே சொல்லியிருக்கிறார். இவர் மகாராஷ்டிர முதல்வரோட மகன். அதனால் கொஞ்சம் ஓவராத் தான் பண்ணுவார் என ஜெனிலியா நினைத்துள்ளார்.
அப்புறம் 2....3 நாளா இவங்க பேசவே இல்லையாம். அடுத்து பேசும்போது எங்க உங்க செக்யூரிட்டி கார்ட்ஸ் என ஜெனிலியா கேட்க, அதற்கு ரிதேஷ் அதெல்லாம் யாருமில்லன்னு சொல்லியிருக்கிறார்.
இந்தப்படத்தோட கிளைமாக்ஸில் ஜெனிலியா இவரை அறைவது போல ஒரு காட்சி வரும். அந்தக்காட்சி நாலைந்து முறை ரீடேக் வாங்கியுள்ளது. அப்படி அறையும் போது இந்த மாதிரி ஒரு பொண்ணு தான் எனக்கு மனைவியாக வர வேண்டும் என்று ரிதேஷ் நினைத்துள்ளார்.
தொடர்ந்து இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு துளிர்விட அது காதலாக மலர்ந்து திருமண நிச்சயதார்த்தத்திற்கு வந்தது. அப்போதும் இருவரும் நல்ல பிரண்ட்ஸ் என்று தான் சொல்லிக் கொண்டு இருந்தனர்.
அப்போது எப்படியாவது ப்ரபோஸ் செய்து விடணும்னு ரிதேஷ் முடிவு பண்ணியிருக்கிறார். மும்பை தாஜ் ஓட்டல் அருகில் உள்ள ஆற்றிலிருந்து இருவரும் படகில் நடுக்கடலுக்குச் சென்றனர். அப்போது வானில் கலர் கலராக பட்டாசு வெடிக்க செமயாகப் பிரபோஸ் பண்ணியிருக்கிறார் ரிதேஷ்.
அதெப்படி கரெக்டா அந்த டைமுக்கு பட்டாஸ் வெடிச்சதுன்னு எல்லோருக்கும் ஜெனிலியாவுக்கு ஆச்சரியம். ரிதேஷோட பிரண்ட் அங்க உள்ள ஒரு அபார்ட்மென்ட்ல இருந்துள்ளார். அவரிடம் சொல்லியே இந்தப் பட்டாசு வெடிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாம்.
இன்ஸ்டாகிராமில் அடிக்கடி குடும்பத்தினருடன் வீடியோ போட்டு கலக்குவார் ஜெனிலியா. இவருக்கு 2 குழந்தைகள்.
ரிதேஷ_ம் எதற்குமே கோபப்படமாட்டாராம். குடும்பத்தில் ஏதாவது சண்டை வந்தாலும் அப்படியே ஜெனிலியா கத்துவதைக் கேட்டுவிட்டு அமைதியாகத் தூங்கச் சென்றுவிடுவாராம். மறுநாள் எழுந்ததும் புதுநாளில் எழுந்தது போல புத்துணர்ச்சியுடன் அந்த நாளைத் தொடங்குவார்.
இவர்கள் இமேஜின் என்ற ஒரு உணவகத்தையே தொடங்கியுள்ளார். இது பிளாண்ட் பேஸ் மீட் என்கின்றனர். உணவை இமேஜின் பண்ணிக்கிட்டு பச்சையான தாவரங்களை சாப்பிட வேண்டும். அட்வன்சர், டிரெக்கிங், தீம் பார்க் ஆகிய இடங்கள் தான் ஜெனிலியாவிற்குப் பிடித்த இடங்கள்.
இவர்கள் பிளைட்டில் எங்க போனாலும் பிசினஸ் கிளாஸ் புக் பண்ண மாட்டாங்களாம்.
எக்கனாமிக் கிளாஸ் தான் புக் பண்ணுவாங்க. ஏன்னா குழந்தைங்க அப்ப தான் எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிடுமாம்.
இவர் மாஷாவிலிருந்து மார்கோ சோப் வரை பிராண்ட் அம்பாசிடரா இருந்துருக்காங்க. இவருக்குப் பிடித்த படம் டைட்டானிக். இத்தாலி, லண்டன் தான் இவருக்குப் பிடித்த நகரங்கள். குரோர்பதியில் பங்கேற்று ரூ.25 லட்சம் பரிசைப் பெற்றுள்ளார்.
ஜெனிலியா தனது 24 வயதில் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம்னு நாலு மொழிகளிலும் தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களைத் தந்தவர் தான் ஜெனிலியா.