நீ எங்க ஜானுவே இல்ல!.. ரூட்டை மாற்றிய கவுரி கிஷான்.. இது தாங்காது செல்லம்
96 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் கௌரி கிஷான். அந்தப் படத்தில் சிறு வயது திரிஷாவாக பள்ளி மாணவியாக அழகான இரட்டை ஜடை அணிந்து அற்புதமாக நடித்திருப்பார்.
தமிழ், மலையாளம் போன்ற படங்களில் பிசியாக நடித்து வரும் கௌரி கிஷான் தற்போது பிகினிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட கௌரி கிஷான் பள்ளி வயதிலேயே சினிமாவிற்கும் நுழைந்தவர். முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் கௌரி கிஷான்.
அந்தப் படத்தை தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து அந்தப் படத்தின் மூலமும் ஒரு வரவேற்பை பெற்றார். அவர் நடித்த படங்கள் முழுவதும் அவரை சுடிதாரிலேயே பார்த்த ரசிகர்களுக்கு இப்பொழுது அவரைப் பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான ஸ்டைலிஷ் ஆன ஆடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் கௌரி கிஷான்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் குட்டை பாவாடையில் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.