கல்யாணமானாலும் அதுல ஒன்னும் குறையல!.. ஹை க்ளாஸ் ஆங்கிளில் புகைப்படம் வெளியிட்ட ஹன்சிகா..
தமிழ் திரைப்பட உலகில் முன்னனி நடிகையாக அறியப்பட்டவர் நடிகை ஹன்சிகா. ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் முதன் முதலாக தனுஷுக்கு ஜோடியானார் ஹன்சிகா. ஆரம்பத்தில் சில ஹிந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அல்லு அர்ஜூனுக்கு தான் முதலில் ஜோடியாக நடித்தார்.
அதன் பின் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என தொடர்ச்சியாக படங்களில் நடிக்க வாய்ப்பு வர முன்னனி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் ஹன்சிகா. தமிழில் அனைத்து முன்னனி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்த ஹன்சிகா நடித்த பெரும்பாலான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த வருடம் தான் தனது தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் மீண்டும் சென்னை திரும்பியிருக்கிறார் ஹன்சிகா.
இந்த நிலையில் ரசிகர்களை தன் வசம் வைத்திருக்க அவ்வப்போது இன்ஸ்டாவில் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்.