இந்த புள்ள ஊசி போட்டு வளர்ந்த புள்ளையா?.. பிரபல நடிகையின் தாய் விளக்கம்!..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. ‘மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்னதாகவே குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் நடித்திருக்கிறார் ஹன்சிகா.
முதன் முதலில் நாயகியாக அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக “தேசமுதுரு” என்ற திரைப்படத்தில் தான் நடித்தார்.தமிழில் முதல் படமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து ‘வேலாயுதம்’, ‘எங்கேயும் காதல்’, ‘பிரியாணி’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற படங்களில் நடித்து மக்களின் அபிமானத்தை பெற்றார்.
இப்படி ஒரு முன்னனி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா கடந்த இரண்டு வருடங்களாக பட வாய்ப்புகள் இன்றி தவித்து வந்தார். கடைசியாக மகா என்ற படத்தை தயாரித்து அதில் நடிக்கவும் செய்தார். ஆனால் அந்தப் படமும் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை.
இந்த நிலையில் தனது நீண்ட நாள் நண்பரும் தொழில் ரீதியாக நெருக்கமானவருமான சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார் ஹன்சிகா. இவர்கள் திருமணம் அரச முறைப்படி மிகவும் பாரம்பரியமாக ஒருவார காலம் கோலாகலமாக நடைபெற்றது.
இதன் பின் ஓடிடி தளத்தில் “லவ் ஷாதி டிராமா” எந்த தொடர் மூலம் தன்னுடைய வாழ்க்கை, காதல், திருமணம் ஆகியவற்றை பற்றி பேசியிருந்தார். அதில் அவரது திருமணம் சம்பந்தமான சர்ச்சைக்கும் முற்றுப் புள்ளி வைத்தார். இதற்கிடையில் ஹன்சிகாவை பற்றி மற்றுமொரு சர்ச்சை என்னவெனில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருக்கும் போதே எப்படி அவர் திடீரென வளர்ந்தார் என்று தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்கும் போதே கேள்விகள் எழுப்பப்பட்டதாம்.
இதையும் படிங்க : மணிரத்னம் படத்திற்கு ஏன் இளையராஜா இசையமைப்பதில்லை?.. இப்படி ஒரு பிரச்சினையா?..
மேலும் அவரது தாய் ஊசி மூலம் தான் ஹன்சிகாவை வளர்த்திருக்கிறார் என்று பல வதந்திகள் பரவியிருக்கின்றன. இதை பற்றி அந்த ஓடிடி தளத்தில் பேசிய அவரது தாய் இந்த விஷயம் உண்மையென்றால் டாடா, மற்றும் பிர்லாவை விட நான் தான் பணக்காரியாக இருந்திருப்பேன் என்றும் உங்களுக்கு வேகமாக வளரும் வேண்டும் என்றால் என்னிடம் வாருங்கள் என்றும் சற்று கோபமாக பேசியிருந்தார். மேலும் எங்கள் குடும்ப நடைமுறைப்படி குடும்பப் பெண்கள் 12 முதல் 16 வயது வரை வேகமாக வளர்ந்து விடுவார்கள் என்றும் கூறினார்.