தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா மோத்வானி. தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகம் ஆன இவர் விஜ்ய், விக்ரம், சிம்பு என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று அழைக்கப்பட்ட அவர் இவர் தனது நீண்ட கால நண்பரும், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபருமான சோஹைல் கதுரியாவை 2022-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா அரண்மனையில் இவர்களது திருமணம் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணம் தொடர்பான நிகழ்வுகள் ‘ஹன்சிகாஸ் லவ் ஷாதி டிராமா’ என்ற பெயரில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
Photo credit: Hansika instagram
திருமணமாகி சில காலங்களிலேயே இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்புகளை அடுத்து கடந்த ஜூலை 2024 முதல் தனித்தனியாகவே வாழ்ந்து வந்துள்ளனர். இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பலமுறை சமரசம் செய்ய முயன்றும், அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதனையடுத்து, விவாகரத்து கோரி மும்பை பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மார்ச் 11, 2026 அன்று இருவருக்கும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Photo credit: Hansika instagram
இந்த நிலையில் விவாகரத்துக்கு பின் முதன்முறையாக தனது அம்மாவுடன் அமிதசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை தந்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் நீங்கள் தைரியமா இருங்கள், நாங்கள் இருக்கிறோம் என்று கமெண்ட் செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…