Ajith: மெடிக்கல் பிரச்னை எல்லாம் Sympathy… பக்கா ஸ்கெட்ச் அஜித்குமார்… ஹீரா அம்பலப்படுத்திய அதிர்ச்சி…

by Akhilan |
Ajith: மெடிக்கல் பிரச்னை எல்லாம் Sympathy… பக்கா ஸ்கெட்ச் அஜித்குமார்… ஹீரா அம்பலப்படுத்திய அதிர்ச்சி…
X

Ajith: தமிழ் திரையுலகின் முன்னாள் பிரபல நடிகை ஹீரா ராஜகோபால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன் முன்னாள் காதலர் அஜித் குமாரை குறித்த முக்கியமான குற்றச்சாட்டுகளை வெளியிட்டு இருந்த நிலையில் அது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1990களில், தமிழ் சினிமாவில் அஜித் குமார் வளர்ந்துவரும் ஹீரோவாக இருந்தார். அதே சமயம் ஹீரா ராஜகோபாலும் முன்னணி நடிகையாக பிரபலமடைந்திருந்தார். இவர்கள் இருவரும் முதல்முறையாக காதல் கோட்டை படத்தில் நடித்தனர்.

அதே படப்பிடிப்பில் இணைந்து நடித்த போது, இவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகி காதல் மலர்ந்தது. அஜித், ஹீராவை மிகவும் நேசித்து, காதல் கடிதங்களும் எழுதியதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அவர்கள் காதல் ஊடகங்களிலும் பெரிய விவாதமாகிப் போனது.

ஆனால், சிறிது நாட்களில் ஹீராவின் தாயார் இந்த உறவை விரும்பவில்லை என்றும், ஹீராவிடம் போதை பழக்கம் இருந்ததால் அவரை அஜித் பிரேக் அப் செய்தார் என்றும் தகவல்கள் கசிந்தது. அதன்பிறகு, அஜித் அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் தற்போது ஆஸ்தான தம்பதிகளாக வலம் வருகின்றனர். மேலும், அஜித்தும் இன்று டெல்லியில் பத்ம பூஷன் விருது வாங்க இருக்கிறார். இந்நிலையில் அஜித் குறித்து ஹீரா வைத்திருக்கும் சில குற்றச்சாட்டுகள் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை ஹீரா அளித்திருக்கும் தகவலின்படி அஜித்துக்கே எதிராக மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். துரோகம் செய்தது, என்னுடைய கேரக்டரை அசிங்கப்படுத்தியது மற்றும் ரசிகர்களின் மூலம் வன்முறையை திட்டமிட்டதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், அஜித் ரசிகர்களின் இரக்கத்தை பெற மருத்துவ பிரச்சனைகளை ஏற்படுத்தி வைத்திருந்தார். மேலும் அவர் மீது தப்பான செய்திகளை கட்டுப்படுத்த ஊடகங்களுக்கு பணம் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

நான் வேலைக்காரி மாதிரி இருக்கும் பெண்ணை பார்த்து கட்டிக்கொள்வேன். யாருடன் வேண்டும் என்றாலும் தவறாக இருப்பேன் எனவும் அஜித் தெரிவித்துள்ளதாக ஹீரா குறிப்பிட்டுள்ளார்.

கோலிவுட் வட்டாரத்தில் இருக்கும் பிரபலங்களே ஒப்புக்கொண்ட நிலையில் அஜித்துக்கு 90களில் பக்கபலமாக இருந்தவர் ஹீரா. பல படங்களில் வாய்ப்பு வாங்கி கொடுத்ததும் ஹீரா தான் எனக் கூறப்படுகிறது. இன்று மாலை பத்மபூஷன் வாங்க இருக்கும் நிலையில் ஹீராவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியாகி இருக்கும் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Next Story