உனக்கு என்னம்மா ஆச்சு!... ஸ்லிம் ஆகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை...

மேயாத மான் படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை இந்துஜா. விஜய் நடித்த பிகில் படத்தில் அவரது டீமில் இருக்கும் கால்பந்தாட்ட வீராங்கணையாக நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர். சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார்.
2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப்படத்தில் நடிகர் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சூப்பர் டூப்பர் படத்தில் இந்துஜா கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார். இந்த படத்தில் முத்த காட்சியொன்றிலும் இந்துஜா துணிச்சலாக நடித்து இருக்கிறார். ஏற்கனவே குடும்ப பாங்கான இமேஜ் தன்மீது படிந்துள்ளதால் அதை மாற்றவும் பட வாய்ப்புகளை பிடிக்கவும் கவர்ச்சிக்கு மாறி இருப்பதாக கூறப்படுகிறது.
அதன் விளைவாக உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறியுள்ள இந்துஜா இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.