அவருக்காக அட்ஜெஸ்ட் பண்ணனும்னு நினைச்சேன்!.. மேடையிலேயே ஓப்பனா சொன்ன இனியா!.

Published on: September 20, 2023
actress eniya
---Advertisement---

இனியா தமிழ் சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். பாடகசாலை எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் வாகைசூடவா திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக விமல் நடித்திருந்தார். கிராம பாங்கான இப்படத்தின் மூலம் தனக்கென தனி பெயரையும் சம்பாதித்தார். மேலும் இவர் அம்மாவின் கைபேசி, புலிவால், சென்னையில் ஒரு நாள் போன்ற திரைப்படங்களின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார்.

இதையும் படிங்க:ஹிட் பட விழாவில் நம்பியார் அடித்த கமெண்ட்!.. பதில் கவுண்ட்டர் கொடுத்து அசரவைத்த எம்.ஜி.ஆர்…

இவர் தற்போது வள்ர்ந்து வரும் இயக்குனராக துரை முருகன் இயக்கவுள்ள சீரன் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தினை தயாரிப்பாளர் ஜேம்ஸ் கார்த்திக் தயாரிக்க உள்ளார். இப்படத்தின் படபிடிப்புகள் நடைபெற்று இருக்கும் நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் இனியா கதாநாயகியாகவும் இவருக்கு ஜோடியாக ஜேம்ஸ் கார்த்திக் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சென்ராயன் , ஆடுகளம் ரமேஷ் போன்றவர்களும் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகை இனியா மூன்று வேடங்களில் நடிக்க உள்ளாராம்.

இதையும் படிங்க:முதல் சம்பளத்தில் எஸ்.ஜே.சூர்யா செய்த செயல்!… மனுஷன் இவ்வளவு தங்கமானவரா!..

இருபது வயது பெண், 40 வயது பெண் மற்றும் அதை விட வயதான பெண் என மூன்று வேடங்களில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் இவரை எடையை குறைக்கும்படி கூறியுள்ளார். ஆனால் அந்த விஷயத்திற்கு மட்டும் இவர் மிகவும் சிரமப்பட்டுள்ளாராம்.

மேலும் இது கிராமத்து கதை என்பதால் கத்தரி வெயிலிலும் நின்று நடிக்க வேண்டியிருந்ததாம். இப்படத்தில் ஜேம்ஸ் கார்த்திக் கதாநாயகனாக அறிமுகமாவதால் அவருக்காக இனியா படப்பிடிப்பில் நிறைய அட்ஜஸ்மெண்ட் செய்ய வேண்டுமோ என நினைத்துள்ளார்.

ஆனால் அறிமுக நாயகனாக இருந்தாலும் கூட தான் கேட்ட அளவிற்கு ரீடேக் அவர் கேட்கவில்லை மற்றும் இனியாவின் வசனங்களை கூட அவர் தெரித்து வைத்திருந்ததாகவும் இனியா தற்போது நடைபெற்ற டிரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:லியோ படத்தில் விக்ரம்… லோகேஷை பகிரங்கமாக மாட்டி விட்ட கமல்ஹாசன்… இருக்குமோ!

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.