‘அயலான்’ படத்தில் இவங்களும் இருக்காங்களா? 23 வருஷம் கழிச்சு ரீஎண்ட்ரியில் கலக்க வரும் விஜய் பட நடிகை

Published on: September 22, 2023
siva
---Advertisement---

Ayalan movie: சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் அயலான். சையின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்த அயலான் திரைப்படம் இந்த வருடம் தீபாவளி என்று ரிலீஸ் ஆகும் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது.

படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் ஒரு வித எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத்சிங் நடிக்கிறார். இந்த நிலையில் அயலான் திரைப்படத்தில் மற்றுமொரு நடிகையும் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: என்னய்யா சொல்றீங்க? ‘ரஜினி171’ அவருக்கு சொல்லப்பட்ட கதையா? நட்புனா என்னனு காட்டிட்டாரே

அவரை பற்றி எந்தவித செய்தியும் இதுவரை வரவில்லை. விஜயுடன் ஜோடி சேர்ந்த இந்த நடிகை தமிழில் பிரசாந்த், அரவிந்த்சாமி ஆகியோருடனும் நடித்திருக்கிறார். பொதுவாக ஃபீல்டு அவுட் ஆன நடிகைகள் சமீபகாலமாக ரீ எண்ட்ரியில் கலக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த நடிகையும் தமிழில் அயலான் படத்தின் மூலம் மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை.  நடிகை இஷா கோபிகர். விஜய் நடித்த நெஞ்சினிலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதிலும் குறிப்பாக மனசே மனசே பாடல் மூலம் இன்றுவரை மனதில் நிலைத்து நிற்கிறார் இஷா கோபிகர்.

இதையும் படிங்க: விடாமுயற்சியில் கண்டிப்பா இதெல்லாம் வேணும்… அஜித் போட்ட கண்டிஷன்… முத நீங்க ஷூட்டிங் வாங்க!

பிரசாந்த் நடித்த காதல் கவிதை, அரவிந்த் சாமி நடித்த என் சுவாசக்காற்றே , விஜயகாந்த் நடித்த நரசிம்மா போன்ற படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடைய சிறப்பம்சம் என்னவென்றால் படத்தின் பாடல்கள் மூலமாகவே இவர் அதிக வரவேற்பை பெற்றார்.

அந்தளவுக்கு இவர் நடித்த படங்களின் பாடல்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட். இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் திரைப்படத்தில் ஒரு கம்பேக் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே ஹிந்தியில் பல வெப் சீரிஸ்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறாராம் இஷா கோபிகர்.

இதையும் படிங்க: லியோ படத்தில் நடந்த கொடுமை!.. கதறும் நடன நடிகர்கள்!… இதெல்லாம் நியாயமே இல்ல!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.