இப்படி பாத்தா ஏங்கி போயிடுவோம்!...லவ் டுடே நாயகியின் க்யூட் கிளிக்ஸ்....
கேரள சினிமாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த சிறுமி நடிகைகளில் இவானாவும் ஒருவர். இயக்குனர் பாலா ஜிவி பிரகாஷை வைத்து இயக்கிய நாச்சியார் திரைப்படத்தில் இவரை அறிமுகம் செய்தார்.
சில மலையாள திரைப்படங்களில் சிறுமியாகவே நடித்துள்ளார். அதன்பின், ஹீரோ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். அதன்பின் சில வருடங்கள் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை.
தற்போது மாபெரும் ஹிட் அடித்துள்ள லவ் டுடே திரைப்படம் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். இப்படம் அதிரி புதிரி ஹிட் ஆகியுள்ளது. எனவே, தமிழில் இவானா ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம், இதுதான் சரியான நேரம் என கணித்த இவானா தன்னுடையை புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.