‘லவ் டுடே’ வெற்றியின் மூலம் கிடைத்த லக்!.. மொத்தமா அறுவடை செய்த நடிகை இவானா!
லவ் டுடே படம் வெற்றி பெற்றாலும் பெற்றது அந்த பட சம்பந்தமான அனைத்து கலைஞர்களுக்கும் ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தது என்றே கூறலாம். ஆரம்பத்தில் படத்தை வாங்க தயங்கிய ஏஜிஎஸ் நிறுவனம் இன்று பல கோடிகளில் படத்தின் வெற்றியால் புரண்டு கொண்டிருக்கிறது.
படத்தின் நாயகனும் இயக்குனருமான பிரதீப் ரெங்கநாதனுக்கும் படம் இந்தளவுக்கு வெற்றி பெறுமா? என்ற வியப்பிலேயே இன்று வரை இருந்து கொண்டிருக்கிறார். எதார்த்தமாக வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் என்றாலும் அதை கொண்டு போன விதத்தில் ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறார் பிரதீப் என்று தான் சொல்லவேண்டும்.
இதையும் படிங்க : ஷங்கருக்குள் இருந்த தயாரிப்பாளரை எழுப்பிய பிரபல இயக்குனர்… நைஸ் மூவ்!!
அதை தொடர்ந்து பல நிறுவனங்கள் அவருக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து படத்தின் ஹீரோயினான இவானா. இன்னொரு ப்ளஸ் என்றே சொல்லலாம். தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். நாச்சியார் படம் அவருக்கு அறிமுகம் படம் என்றாலும் அந்த படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு லவ் டுடே படம் தான் இவானாவுக்கு கை கொடுத்திருக்கிறது.
இதுமட்டுமில்லாமல் அம்மணிக்கு படங்கள் வரிசை கட்டிக் கொண்டிருக்கின்றன. மேலும் படத்தின் வெற்றி இவானாவின் மௌசையும் கொஞ்சம் அதிகரித்திருக்கிறது. வரும் படங்களில் அவருக்கு 35 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் பல விளம்பர படங்கள் கூட இவானாவை தேடி தேடி வந்து வாய்ப்புகளை கொடுத்து வருகின்றனராம். மொத்தமாக 4 விளம்பர படங்களில் இவானா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம். மொத்தமாக விளம்பர படங்களுக்கு மட்டுமே 4.50 கோடி வரை சம்பளம் வருமானம் வரும் என தெரிகிறதாம்.