ஒரே படத்தை 100 முறை பார்த்து ஆச்சரியப்பட வைத்த நடிகை...அடடே...இவரா...! அம்மாவை மிஞ்சிய அழகு பதுமை...!

by sankaran v |   ( Updated:2023-02-16 17:04:31  )
ஒரே படத்தை 100 முறை பார்த்து ஆச்சரியப்பட வைத்த நடிகை...அடடே...இவரா...! அம்மாவை மிஞ்சிய அழகு பதுமை...!
X

Jaanvi kapoor

ஒரு படத்தை நல்லா இருந்தால் 2 அல்லது 3 முறை கூட பார்க்கலாம். அல்லது நீண்ட இடைவெளிக்கு அப்புறம் ஒன்றிரண்டு முறை பார்க்கலாம். ஆனால் 100 முறை ஒரே படத்தைப் பார்ப்பது என்பது எல்லாம் நம்பும்படியாகவா உள்ளது?!

உள்ளதைச் சொன்னால் யார் தான் நம்புவர் இந்த உலகில்..என்று சிலர் புலம்புவதை நாம் காணலாம். நம்பினால் நம்புங்கள் என்ற கூற்றுக்கேற்ப நாமும் சொல்லி வைப்போம். நம்புவதும் நம்பாததும் அவரவர் இஷ்டம். பழமொழின்னா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாதுன்னு கமல் பம்மல் கே.சம்பந்தம் படத்தில் அடிக்கடி சொல்வார்.

அது மாதிரி தான் இதுவும். ஒரு படத்தை ஒரு இளம் நடிகை 100 முறை பார்த்து ரசித்துள்ளாராம். தொடர்ந்து படியுங்க...அது யார்? எதற்கு? படத்தில் அப்படி என்ன விசேஷம் என்ற தகவல்களும் உங்களுக்குக் கிடைக்கும்.

80களில் தமிழ்சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து அசத்தியவர் ஸ்ரீதேவி. கமல், ரஜினி படங்களில் நடித்து அசத்தியவர்.

கமலுடன் இவர் நடித்த 16 வயதினிலே படத்தை இன்று வரை யாராலும் மறக்க முடியாது. இதே படத்தில் ரஜினியும் நடித்து அசத்தி இருந்தார். அதே போல மூன்றாம்பிறை படம் இவரது திரைஉலக வரலாற்றில் ஒரு மைல் கல்.

Sridevi

இன்று வரை அதுபோன்ற அசாத்தியமான கேரக்டரில் எந்த நடிகையும் நடித்தது இல்லை. அப்படி ஒரு அபாரமான நடிப்பு. கமலுக்கே இவர் தன் நடிப்பால் சவால் விட்டு இருப்பார். இவரது மகள் ஜான்வி கபூர். கலிபோர்னியாவில் நடிப்புக்கான படிப்பை முடித்துள்ளார்.

Jaanvi

2018ல் வெளியான தடாக் படத்தின் மூலம் இந்தித் திரை உலகில் அறிமுகமானார் ஜான்வி. இந்தப்படம் முழுக்க முழுக்கக் காதலை மையக்கருவாகக் கொண்ட படம். முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் மாஸான வரவேற்பு கிடைத்தது.

Vijay Sethupathi

சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி குறித்து கொடுத்த பேட்டியில் இவ்வாறு தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

விஜய்சேதுபதி சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். நானும் ரௌடி தான் படத்தை 100 தடவை பார்த்து விட்டேன். அவரிடம் பேசுவதற்கு முயற்சி செய்தேன். அவரது போன் நம்பரைப் பெற்று பேசினேன். உங்களது தீவிர ரசிகை.

Jaanvi3

நான் உங்களுடன் படத்தில் நடிக்க விரும்புகிறேன் என்றார். அதற்கு விஜய்சேதுபதியோ ஐயோ...ஐயோ... என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் மறுத்தாரா, வெட்கப்பட்டாரா என தெரியவில்லை.

நான் ஆர்வமாக இருந்ததால் ஆச்சரியப்பட்டார் என்று நினைக்கிறேன்...என்கிறார் ஜான்வி. கவர்ச்சியில் தான் அம்மாவை மிஞ்சி நிற்கிறார் இந்த அழகு பதுமை.

Next Story