‘நானும் ரௌடி தான்’ படத்தை 100 முறை பார்த்த பாலிவுட் நடிகை!.. விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா?..

vijay sethupathi
தமிழ் சினிமாவில் உச்சம் பெற்ற நடிகராக அனைவருக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரின் எதார்த்தமான பழகு முறையே அனைவரையும் ஈர்க்கக்கூடிய வகையில் இருப்பதால் ரசிகர்கள் முதல் தமிழ் திரைப்பலங்கள் வரை அனைவருக்கும் பிடித்த மனிதராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி.

vijay sethupathi nayan
பொதுவாக நடிகைகளுக்கு பிடித்த நடிகராக விளங்குகிறார் விஜய் சேதுபதி. ஹோலிவுட் மட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட்டிலும் தன் முத்திரையை பதித்து வருகிறார். ஷாரூக்கானின் ஜவான் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி பாலிவுட்டின் ஒரு பிரபல நடிகையின் க்ரஷுக்கு ஆளாகியுள்ளார்.
அவர் வேறு யாருமில்லை நடிகை ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர் தான். ஜான்வி கபூர் விஜய் சேதுபதியின் நானும் ரௌடி தான் படத்தை கிட்டத்தட்ட 100 முறை பார்த்துவிட்டாராம். 2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரௌடி தான் படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த ஒரு காமெடி படம்.

janvi kapoor
இதையும் படிங்க : வரட்டும்பா நம் நண்பர் தான!.. ‘துணிவு’ படத்தின் ரிலீஸ் பற்றி வெளிப்படையாக கூறிய விஜய்!…
இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், ஆர்ஜே.பாலாஜி போன்ற நடிகர்கள் நடித்து அனிருத் இசையில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படமாகும். இந்த படத்தை தான் ஜான்வி கபூர் 100 முறை பார்த்துவிட்டு விஜய் சேதுபதிக்கு தொலைபேசியில் அழைத்து பேசினார்.
மேலும் விஜய் சேதுபதியிடம் ‘ நான் உங்கள் தீவிர ரசிகை, உங்களுக்கு ஏதாவது ஒரு படத்தில் என்னை நடிக்க வைக்க வேண்டும் என நினைத்தால் என்னை அழையுங்கள், அந்த படத்திற்கான ஆடிஷனில் கலந்து கொள்ள தயாராகி இருக்கிறேன்’ என்று கூறினாராம் ஜான்வி கபூர். அதற்கு விஜய் சேதுபதி இதையெல்லாம் கேட்டுவிட்ட ஐய்யோ என்று சொன்னாராம். இதை ஒரு பேட்டியில் ஜான்வி கபூர் தெரிவித்தார்.

vijay sethupathi