டீன் ஏஜ் வயதினரையும் கவர்ந்து இழுத்த சிவாஜியின் அந்த மேனரிசங்கள்!. எதைச் சொல்கிறார் ஜெயசித்ரா?..

EM-JC
குணச்சித்திர நடிகை ஜெயசித்ரா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உடனான தனது நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்கிறார்னு பார்ப்போமா...
நான் வித்யோதயா கான்வென்டில் படிக்கும்போது எங்க மாமா படத்தை நான் தோழிகளுடன் இணைந்து லிபர்டி தியேட்டர்ல பல தடவை பார்த்துருக்கோம். அதுல அவ்ளோ பிரமாதமா நடிச்சிருப்பாரு சிவாஜி. ஹீரோயிசம், பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி, ரொமான்டிக் லுக் எல்லாம் டீன் ஏஜ் எல்லோரையும் கவர்ந்து இழுத்துரும். அதுல வர்ற என்னங்க பாட்டு செம மாஸா இருக்கும்.

Saraswathi sabatham
அதே மாதிரி சரஸ்வதி சபதம் படத்தில் சரஸ்வதி புத்திரனாக நடித்து அசத்தியிருப்பார் சிவாஜி. உண்மையிலேயே அவர் சரஸ்வதி புத்திரன் தான். கோவில்ல அவர் அகர முதல எழுத்தெல்லாம்னு பாடுற பாட்டு... அவர் உடலில் கண், உதடு, கண் இமை எல்லாமே பேசும். அவர் ஒரு யுனிவர்சிட்டி. அவரைப் பற்றி சொல்றதுக்கு வார்த்தைகளே இல்லை. அவருக்கு அவார்டு கொடுக்க வேண்டிய தேவை இல்லை. அவரே ஒரு அவார்டு தான்.

Bharathavilas
பள்ளியில் இருந்து போய் அவர் படத்தைப் பார்த்த எனக்கு அவர் கூடவே நடிக்கிற பாக்கியம் கிடைச்சது. பாரதவிலாஸ் படத்தோட சூட்டிங். அப்போ நான் ஸ்கூல்ல படிச்சிக்கிட்டு இருக்கேன். சிவாஜியோட மகளா நடிச்சிக்கிட்டு இருந்தேன். எனக்கு ரொம்ப ஆச்சரியம். அவரையே பார்த்துக்கிட்டு இருந்தேன்.
அப்போ என்னை 'குட்டி வா'ன்னு கூப்பிட்டார். என்ன மெல்லுறன்னாரு. பாக்கா..? ஆமா சார் பாக்கு... நோ... நடிக்கும்போது இதெல்லாம் போடவே கூடாது... அப்படின்னு அன்னைக்குக் கொடுத்தார் அட்வைஸ். அதை இன்னைக்கு நான் எல்லோருக்கும் கொடுத்துக்கிட்டு இருக்கேன். அந்தப் படத்துக்கு அப்புறம் எனக்கு நிறைய படங்கள் வர ஆரம்பிச்சுது.
ரத்தபாசம் படத்துல அவருக்கு சகோதரியா நடிச்சேன். அந்தப்படத்துல நடிக்கும்போது அவருக்கிட்ட இருந்த பயம் எனக்குப் போயிடுச்சு. கேசுவலா பேச ஆரம்பிச்சிட்டேன்.