கொஞ்சம் கூட எதிர்பார்க்கல!.. திடீரென கதவு பூட்ட சொன்னாங்க.. மூத்த நடிகையை ஆச்சரியப்படுத்திய ஜெயலலிதா..
தமிழ் சினிமாவில் எப்போதுமே பெண்களுக்கு என்று முக்கிய பங்கு இருக்கிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தான் சினிமாவே நகர்ந்து கொண்டிருக்கின்றன. ஆரம்பகாலங்களில் இருந்து இன்றை சூழல் வரைக்குமே ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்களின் பங்களிப்பு என்று இருந்து கொண்டே வருகிறது.
கே.பி.சுந்தராம்மாள் இவரை கொண்டாடாத சினிமாவே இருக்காது. அந்த வரிசையில் செல்வி ஜெயலலிதா சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். புடவை, தாவணி இவைகளை அணிந்து கொண்டு நடித்த காலகட்டத்தில் ஸ்லீவ் உடைகள், பேண்ட சர்ட் என மாடர்ன் டிரெண்டுக்கு முதன் முதலில் வந்த நடிகை ஜெயலலிதா தான்.
இதையும் படிங்க :அதிக சம்பளம் கேட்டு ஹிட் படத்தை மிஸ் பண்ண கார்த்திக்.. விக்ரமுக்கு அடிச்ச அதிர்ஷ்டம்…
வெண்ணிறாடை படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல நல்ல நல்ல படங்களை கொடுத்து 100க்கும் அதிகமான படங்களில் நடித்து மக்கள் செஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் தான் ஜெயலலிதா. இவருடன் சேர்ந்து பல படங்களில் நடித்த சக நடிகை சச்சு. வயதில் இரண்டு ஆண்டுகள் மூத்தவராக சச்சு இருந்தாலும் போக போக இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்திருக்கிறது.
ஜெயலலிதாவை விட ஜெயலலிதாவின் அம்மா சந்தியா தான் சச்சுக்கு நல்ல அறிமுகமாம். ஆரம்பத்தில் ஜெயலலிதா படப்பிடிப்பில் யார் கூடையும் சரியாக பேசமாட்டாராம். வந்த வேலையை முடித்துக் கொண்டு சென்று விடுவாராம். மதிய உணவு எங்கே சூட்டிங் நடந்தாலும் வீட்டிற்கு போய் தான் சாப்பிடுவாராம்.
ஓரளவு சில விஷயங்களை மட்டும் பகிர்ந்து கொள்வாராம். ஒரு சமயம் ஜெயலலிதா எம்.பி. ஆனதும் அவருக்கு வாழ்த்து சொல்ல நேரில் போயிருக்கிறார் சச்சு. அதன் பிறகு முதலமைச்சர் ஆனதும் வாழ்த்து மடலை அனுப்பியிருக்கிறார். ஜெயலலிதா சச்சுவை வீட்டிற்கு வரவழைத்தாராம்.
இதையும் படிங்க :ஹிட் படத்தில் கல்லா கட்டிய பணம்… மூத்த நடிகரை வீட்டிற்கு அழைத்து அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரஜினிகாந்த்…
சச்சு போனதும் போட்டோக்கள், வீடியோக்கள் என அந்த வழக்கம் எல்லாம் முடிந்ததும் ஜெயலலிதா கதவை பூட்ட சொல்லியிருக்கிறார். பூட்டியதும் சச்சுவை கட்டி அணைத்துக் கொண்டாராம். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத சச்சு அதிசயத்து நின்றிருக்கிறார். அதன் பிறகு பழைய சம்பவங்களை பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தாராம் ஜெயலலிதா.
ஆனால் சச்சு முதலைமைச்சர் ஆகிட்டாங்க, அவர்கிட்ட எப்படி பேச வேண்டும் பேசக் கூடாது என நினைத்துக் கொண்டே போன அவருக்கு ஆச்சரியம் தான் மிச்சம். இதை ஒரு பேட்டியில் சச்சுவே தெரிவித்தார்.