சரோஜாதேவியிடம் சத்தியம் வாங்கிய ஜெயலலிதா!.. அட எப்படியெல்லாம் யோசிச்சிருக்காரு!..
எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடி போட்டு நடித்தவர்கள் சரோஜாதேவியும், ஜெயலலிதாவும்தான். இது திரையுலகில் எல்லொருக்கும் தெரியும். ஒரு படத்தில் நடிக்கும் போது சரோஜாதேவியா, ஜெயலலிதாவா என்பதை எம்.ஜி.ஆர்தான் முடிவு செய்திருக்கிறார். சில சமயம் இயக்குனர் சரோஜாதேவி என்றால் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை சொல்வார்.
இயக்குனர் ஜெயலலிதா என்றால் எம்.ஜி.ஆர் சரோஜாதேவியை சொல்வார். அது அந்த நேரத்தின் அவருடைய முடிவு சம்பந்தப்பட்டது. ஒருகட்டத்தில், ஜெயலலிதா செய்த சில விஷயங்கள் எம்.ஜி.ஆருக்கு கோபத்தை ஏற்படுத்த அவரை ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்து சரோஜாதேவியுடன் அதிக படங்களில் நடித்தார் எம்.ஜி.ஆர்.
இதையும் படிங்க: 17 முறை தனுஷுடன் மோதிய சிம்பு படங்கள்!.. வசூலை அள்ளியது யார்?!.. வாங்க பார்ப்போம்!..
இது ஜெயலலிதாவுக்கு கோபத்தை ஏற்படுத்த அவர் சிவாஜி, ஜெய்சங்கர் உள்ளிட்ட பலருடன் நடிக்க துவங்கினார். இது எம்.ஜி.ஆருக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும் அவரால் ஜெயலலிதாவை தடுக்க முடியவில்லை. ஆனாலும், எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஜோடி என்பது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு ஜோடியாகவே இருந்து.
ஜெயலலிதா, சரோஜாதேவி இருவருமே எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும், எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்த நடிகை என்கிற பெயர் சரோஜாதேவிக்கே கிடைத்தது. எம்.ஜி.ஆருடன் அன்பே வா, படகோட்டி, தர்மம் தலைகாக்கும், என் கடமை, பணக்கார குடும்பம், குடும்ப தலைவன் என பல படங்களிலும் சரோஜாதேவி நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: விரக்தியில் விபரீத முடிவெடுத்த பிரபலம்!.. போனில் பேசி தற்கொலையை தடுத்த எம்.ஜி.ஆர்!..
சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு போய் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் ஜெயலலிதா மாறினார். அதன்பின் நேரம் கிடைக்கும் போது திரையுலகில் தனக்கு நெருக்கமானவர்களை சந்தித்து பேசி வந்தார். அதில் சரோஜா தேவியும் ஒருவர். அதாவது, சரோஜாதேவியை தனது போட்டி நடிகையாக ஜெயலலிதா நினைக்கவில்லை.
ஒருமுறை சரோஜாதேவியிடம் பேசிய ஜெயலலிதா ‘நீங்கள் எப்போதும் நடித்துக்கொண்டே இருக்க வேண்டும். சின்ன சின்ன வேடங்களில் எல்லாம் நடிக்கக் கூடாது. எப்போதும் டாப்பிலேயே இருக்க வேண்டும்’ என சத்தியம் வாங்கினாராம். அதோடு, நீங்கள் நடித்ததில் புதிய பறவை படம் எனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் அவரிடம் ஜெயலலிதா சொல்லி இருக்கிறார்.