ஜெயலலிதா 15 முறை பார்த்து ரசித்த திரைப்படம்! கோடி பேர் ரசித்த படமும் இதுதான்
Jayalalitha:தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிம் இந்த தமிழகத்தையே தன் கட்டுக்குள் வைத்து ஆட்சி செய்த ஒரு மாபெரும் பெண்மணியாக இருந்தவர்தான் நடிகை ஜெயலலிதா. திறமைசாலியான தைரியமான ஒரு இரும்பு பெண் என்றே ஜெயலலிதாவை அனைவரும் அழைத்து வந்தனர். வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஜெயலலிதா இரண்டாவது படத்திலேயே எம்ஜிஆர்க்கு ஜோடியாக நடித்தார்.
அதன் பிறகு தொடர்ந்து எம்ஜிஆர் உடன் சேர்ந்து பல படங்களில் நடித்த ஜெயலலிதா தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த ஜெய்சங்கர் சிவாஜி ஜெமினி கணேசன் என அனைவருக்கும் ஜோடியாக நடித்து ஒரு புகழ்பெற்ற நடிகையாக மாறினார். அதன் பின் எம்ஜிஆர் உடன் இணைந்து கட்சியிலும் ஆர்வம் கொண்டு தொண்டாற்றினார்.
இதையும் படிங்க: விஜய் ரசிகர்களுக்கு இன்னும் 2 நாளில் அடுத்த சேதி காத்திருக்கு… ஆனால் ஃபீல் பண்ணுவீங்க!..
எம்ஜிஆருக்கு பிறகு அந்தக் கட்சியை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்ற ஜெயலலிதா கடைசி வரை ஒரு பலமான கட்சியாக நிர்வகித்து வந்தார். இந்த நிலையில் ஜெயலலிதா ஒரு படத்தை 15 முறை பார்த்து ரசித்திருக்கிறார் என்ற ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் பாதையை ஒரு காலத்திற்குப் பிறகு முற்றிலும் மாற்றியமைத்தவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் பாரதிராஜா.
இவர் இயக்கிய பல படங்கள் திரை பிரபலங்கள் மத்தியிலும் அதிக வரவேற்பை பெற்றது. அதில் முக்கியமாக எம்ஜிஆருக்கும் பாரதிராஜாவின் படங்கள் மிகவும் பிடித்திருந்தது. சில சமயங்களில் பாரதிராஜாவை அழைத்து எம்ஜிஆர் பாராட்டவும் செய்திருக்கிறார். அந்த வகையில் பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை திரைப்படம் அன்றிலிருந்து இன்று வரை அனைவருக்கும் பிடித்த திரைப்படமாகும்.
இதையும் படிங்க: போன இடத்தில் உத்திரவாதம் கொடுத்தாரா விஜய்? கேப்டன் வீட்டில் நடந்தது என்ன?
அந்த படத்தை ஜெயலலிதா 15 முறை பார்த்து ரசித்திருக்கிறார் என முன்பு ஒரு கட்டுரையில் ஜெயலலிதா எழுதியதாக ஒரு தொகுப்பில் கூறப்பட்டுள்ளது. முதல் மரியாதை படத்தை பொருத்த வரைக்கும் இந்த படம் ஆரம்பிக்கப்படும் பொழுது அனைவரும் பாரதிராஜாவை தடுக்க முற்பட்டிருக்கின்றனர். ஏனெனில் சிவாஜிக்கு ராதாவை ஜோடியாக போட்டால் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற கோணத்திலேயே அனைவரும் பாரதி ராஜாவிடம் கொஞ்சம் யோசித்து முடிவெடுங்கள் என கூறியிருக்கிறார்கள். ஆனால் தைரியமாக துணிந்து சிவாஜிக்கு ராதாவை ஜோடியாக போட்டு படம் நினைத்ததற்கும் மேலாக மாபெரும் வெற்றி பெற்றது.