Connect with us
rajini

Cinema News

ரஜினியுடன் நடிக்க வந்த வாய்ப்பு!.. மறுத்த நடிகை!.. தலைவர் என்ன சொன்னார் தெரியுமா?..

தமிழ் சினிமாவில் ஒரு தன்னிகரற்ற நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.
யாரும் எட்ட முடியாத வளர்ச்சி, இந்திய சினிமாவிற்கே சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். சினிமாவிற்குள் வரும் போது எதுவும் இல்லாமல் வந்தவர்.

ஆனால் இன்று உலகமெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு பெரிய ஆளுமையாக திகழ்கிறார். அவரே இப்ப வரைக்கும் நினைத்துப் பார்ப்பது உண்டாம். சாதாரண கண்டக்டராக இருந்தவனா நான்? என்று. பல பேட்டிகளில் ரஜினியே சொல்லியிருக்கிறார். தினமும் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டு வந்தவன் என்று. ஆனால் இன்று இந்தளவு உயரத்தை அடைந்ததை எண்ணி வியப்பாக இருக்கிறது என்று பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

ஆன்மீகவாதியான ரஜினி அவ்வப்போது ஆன்மீக கருத்துக்களையும் ரசிகர்களுக்கு எடுத்துரைப்பார். ஆரம்பகாலங்களில் எப்படியோ இருந்த ரஜினி இன்று எல்லாவற்றையும் துறந்து ஒரு தூய மனிதராக திகழ்கிறார்.

80களில் கிட்டத்தட்ட அனைத்து நடிகைகளுடனும் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா, ராதா, அம்பிகா, ராதிகா, சுஹாசினி என முன்னனி நடிகைகளுடன் ஜோடியாக நடித்திருக்கிறார்.

ஆனால் ஒரே ஒரு நடிகை மட்டும் ரஜினியுடன் நடிக்க மாட்டேனு சொன்னாராம். அது வேறு யாருமில்லை. நடிகை ஜெயஸ்ரீ. அதை ஒரு பேட்டியில் ஜெயஸ்ரீயே கூறியிருக்கிறார். சந்திரமுகி படப்பிடிப்பின் போது ரஜினியை சந்திக்க ஜெயஸ்ரீ சென்றாராம். அப்போது ஜெயஸ்ரீயை பார்த்து ‘ நீதானே என்கூட நடிக்க மாட்டேனு சொன்ன? நடிக்க மாட்டேனு சொன்ன ஒரே நடிகை நீதான்’ என ரஜினி கூறினாராம்.

இதை பற்றி கூறிய ஜெயஸ்ரீ ‘ நடிக்க மாட்டேனுலாம் சொல்லல, அந்த நேரம் எனக்கு நிச்சயதார்த்தம் ஆகியிருந்தது, அதனால் தான் அப்படி சொன்னேன்’ என்று சொல்லியிருக்கிறாராம். இதை கேட்டதும் ரஜினி ‘சரி சரி நான் சும்மா தான் சொன்னேன்’ என்று கூறினாராம்.

இதையும் படிங்க : விருது நிகழ்ச்சியில் அவமானப்பட்டு கலங்கி நின்ற நெல்சன்..! – பதறி போய் கிளம்பி வந்த சூப்பர் ஸ்டார்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top