ஓரினச்சேர்க்கையாளர் என தெரியாமல் காதலித்த வாரிசு பட நடிகை! அட இவங்களா?

by Rohini |
jaya
X

jaya

Actress Jayasudha: வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த வருடம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆன திரைப்படம் வாரிசு. விமர்சனம் ரீதியாக இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும் வசூலில் பல கோடிகளை வாரி இறைத்தது. விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருப்பார். மேலும் இவர்களுடன் பல நட்சத்திர பட்டாளங்களே இந்த படத்தில் நடித்திருந்தனர்.

விஜய்க்கு அம்மாவாக ஜெயசுதா மற்றும் அப்பாவாக சரத்குமார் ஆகியோர் நடித்திருப்பார்கள். இதில் ஜெயசுதா ஆரம்ப காலங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிற மொழிகளிலும் பல படங்களில் நடித்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். ஒரு கட்டத்திற்கு பிறகு வாய்ப்புகள் சரியாக வராததால் குணசேத்திர வேரங்களில் நடிக்க தொடங்கினார்.

இதையும் படிங்க: இதுக்கு தான் உங்களுக்கு வேலை ஆகாதுனு சொல்றது… ஜெனியால் கஷ்டப்பட போகும் தாத்தா…

சமீப காலமாக இளம் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார் ஜெயசுதா. இந்த நிலையில் ஜெயசுதா இரண்டு முறை திருமணமானவர். அவருடைய இரண்டாவது கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் தன்னுடைய காதல் அனுபவங்களை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருப்பது இப்போது சோஷியல் மீடியாக்களில் பெரும் வைரலாகி வருகின்றது.

இள வயதில் இருக்கும் போது பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் மீது மிகவும் ஈர்ப்பு இருந்து வந்ததாம். அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் இருந்ததாம். ஆனால் அது நடக்காது என தெரிந்த போது அந்த ஆசையை விட்டு விட்டாராம். அதேபோல அந்த காலத்தில் உள்ள தெலுங்கு நடிகர்கள் மீதும் இவருக்கே தெரியாமல் இனம் புரியாத ஈர்ப்பு இருந்ததாகவும் அந்த பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க: யாரு மேல இந்த அளவு கோபம்? பொங்கி எழுந்த சுந்தரி.. வைரலாகும் வீடியோ

அதைப்போல ஒரு பிரபல பாடகர் ஒருவரையும் இவர் காதலித்து வந்தாராம். அதன் பின்னர் தான் தெரிந்ததாம் அந்தப் பாடகர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று. அதன் பிறகு அவரை விட்டு பிரிந்து விட்டாராம். இப்படி தன்னுடைய காதலில் ஏற்பட்ட அனுபவங்களை பற்றி அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் ஜெயசுதா.

நடிகை என்பதையும் தாண்டி ஜெயசுதா அரசியலிலும் ஆர்வம் மிக்கவராக இருக்கிறார். ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்த ஜெயசுதா அதன் பின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். அதன் பிறகு எய்.எஸ்.ஆர். காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். இப்போது அவர் பாஜகாவில் இணைய இருப்பதாகவும் சில செய்திகள் வெளியாகியிருக்கிறது.

இதையும் படிங்க: ஓவர் சத்தமா இருக்கே… எல்லா பிரச்னையும் எதுக்கு முத்து, மீனாக்கே வருது… கதைய மாத்துங்கப்பா!..

Next Story