Cinema News
ஜோடியாத்தான் நடிக்க முடியல!.. ‘லால் சலாம்’ படத்தில் ரஜினிக்கு தங்கச்சியாக நடிக்கும் 80’ஸ் நடிகை!..
ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வரும் 7 ஆம் தேதி தொடங்கவுள்ள படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் போன்றோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரஜினி இந்தப் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார்.
படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க ஏஆர். ரஹ்மான் படத்திற்கு இசையமைக்கிறார். படம் பெருமளவு எதிர்பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு லால் சலாம் படம் அமைய இருக்கின்றது.
இந்தப் படத்தில் ரஜினி ஒரு முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. தற்போது ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் திரைப்படத்தில் படுபிஸியாக நடித்து வருகிறார். கூடிய சீக்கிரம் ஜெய்லர் படப்பிடிப்பு முடிந்ததும் லால் சலாம் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லால் சலாம் படத்தை பற்றி அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகும் நிலையில் மேலும் சில முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது. படத்தில் தன்னுடைய மகளுக்காக வாய்ப்புக் கேட்க போய் கடைசியில் தானே அந்தப் படத்தில் நடிக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறார் பிரபல 80’ஸ் நடிகை.
இதையும் படிங்க : தொடர் தோல்வி.. பல கோடி சம்பளம் கேட்கும் விக்ரம்.. இதென்னப்பா நியாயம்?..
தமிழில் ‘உறவுக் காத்த கிளி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஜீவிதா. எத்தனையோ படங்களில் நடித்தாலும் பிரபலமான பாடலான ‘பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா’ என்ற பாடலில் அம்மாவாக வரும் நடிகை ஜீவிதா. ஆனால் அந்தக் காலத்தில் ஒரு படம் கூட ரஜினியுடன் ஜோடியாக நடிக்கவில்லையாம்.
அவருக்கு இரண்டு மகள்கள். அதில் ஒரு மகளுக்காக லால் சலாம் படத்தில் வாய்ப்பு கேட்க கடைசியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜீவிதாவை ரஜினிக்கு தங்கச்சியாக இந்தப் படத்தில் கமிட் செய்திருக்கிறாராம். ஏதோ கிடைச்ச வரைக்கும் லாபம் என்ற மன நிலையில் நடிகை ஜீவிதா இருக்கிறார். இவர் தெலுங்கிலும் முன்னனி நடிகையாக
வலம் வந்தவர்.