More
Categories: Cinema History Cinema News latest news

வசந்தம் பாடி வர…வைகை ஓடி வர…தமிழ்சினிமாவின் இளம் தென்றல் ஜோதி

நீள்வட்ட வடிவ முகம். சோகம் கலந்த மான் போன்ற விழியாள். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பன்மொழிப்படங்களில் நடித்து அசத்தியவர். அமைதியே உருவான சாந்த முகம். இயக்குனர் டி.ராஜேந்தரால் அறிமுகமானவர். இத்தகைய பெருமைக்குரியவர் நடிகை ஜோதி.

இரயில் பயணங்களில் படத்தில் இவர் தான் முக்கிய கதாநாயகி. புதுக்கவிதை படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து அசத்தினார். வெள்ளைப் புறா ஒன்று என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.

Advertising
Advertising

jothi

தமிழில் குறைந்த எண்ணிக்கையில் படங்கள் நடித்தாலும் நிறைவான நடிப்பைத் தந்து ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தார் ஜோதி. தாய்மார்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார்.

1960ல் ஆந்திர மாநிலம் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவள். சிறுவயதிலேயே கலை ஆர்வம் மிக்கவராக விளங்கினார். வானொலியில் பாடல் கேட்டாலே நடனம் ஆடுவதில் வல்லவர். இப்படித்தான் அவருக்குள் இருந்த கலைஞானம் வெளிப்பட்டது.

தங்கள் செல்ல மகளின் ஆர்வத்திற்கு அணை போட விரும்பாத பெற்றோரும் பாரம்பரிய நடனக்கலை ஆசிரியரிடம் இவருக்கு நடனம் கற்றுத் தர ஏற்பாடு செய்தனர். அப்போதே பள்ளிப்படிப்புடன் இணைந்து நடனத்தையும் கற்றுத் தேர்ந்தார் ஜோதி. பள்ளி கலைநிகழ்ச்சிகளில் நடனம், நாடகம் என பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை வென்றார்.

rajni, jothi

திரையில் தோன்றும் கதாபாத்திரங்களைப் போல நடித்து வசனம் பேசிப் பழகினார். இது அனைவரையும் வியக்க வைத்தது. 1978ல் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது.

தெலுங்கில் இந்தப்படம் அதே ஆண்டில் ரீமேக் ஆனது. தமிழில் சுதாகர் ஏற்ற கதாபாத்திரத்தை தெலுங்கில் மோகன் ஏற்றார். ராதிகா ஏற்ற கதாபாத்திரத்தை ஜோதி ஏற்றார். இருவருமே அப்போது அறிமுகம் தான். அங்கும் இந்தப்படம் சக்கை போடு போட்டது. மோகனுக்கும், ஜோதிக்கும் இந்தப்படம் பெரும் பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்தப்படத்தை இயக்குனர் பாபு இயக்கினார்.

தொடர்ந்து மீண்டும் இயக்குனர் பாபு இயக்கத்தில் வம்சவிருட்சம் என்ற படத்தில் ஜோதி நடித்தார். இந்தப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னை ஸ்டூடியோவில் நடைபெற்றது. அதைக் கண்ட இயக்குனர் டி.ராஜேந்தர் தனது அடுத்த படத்திற்கு கதாநாயகி இவர் தான் என தீர்மானித்தார்.

srinath, Jothi

1981ல் அவர் இயக்கத்தில் வெளியான இரயில் பயணங்களில் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ஜோதி. இந்தப்படத்தில் ஜோதியைக் காதலிப்பவராக ஸ்ரீநாத் நடித்து அசத்தியிருப்பார். ஆனால் எதிர்பாராதவிதமாக ராஜீவைத் திருமணம் செய்து விடுவார். இதனால் காதலுக்கும், கணவருக்கும் இடையில் சிக்கித் தவிப்பவராக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ஜோதி.

இந்தப்படத்தில் தான் வசந்தம் பாடி வர வைகை ஓடி வர என்ற சூப்பர்ஹிட்டான பாடல் இடம்பெற்றது. தொடர்ந்து ரஜினியின் புதுக்கவிதை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். ரஜினிக்கும் ஜோதிக்கும் இடையே முதலில் மோதலில் ஆரம்பித்து பின்னர் காதலாக மாறும்.

கனத்த கதை ஆனால் ஒரு புதுக்கவிதையாக மலர்ந்தது அக்கால ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப்படத்திற்கு இசை அமைத்தவர் இளையராஜா. ஜேசுதாஸின் வெள்ளைப் புறா ஒன்று பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.

விஜயகாந்துடன் சட்டம் சிரிக்கிறது, சிவாஜி நடிப்பில் நெஞ்சங்கள். ராஜேஷ_டன் முடிவல்ல ஆரம்பம், விஜயகாந்துன் ராமன் ஸ்ரீ ராமன் ஆகிய படங்களில் நடித்து அசத்தினார் ஜோதி.

Actress jothi

பின்னர் தெலுங்குக்கு சென்றுவிட்டார். 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் திரை உலகம் வந்தார். அப்போது அவருக்கு தாயார் வேடம் தான் கிடைத்தது. 2000 பிரசாந்த், சிம்ரன், லைலா நடிப்பில் வெளியான பார்த்தேன் ரசித்தேன் படத்தில் பிரசாந்தின் தாயாராக நடித்தார். தொடர்ந்து பிரபுவின் வண்ணத்தமிழ் பாட்டு, பிரபுதேவாவின் உள்ளம் கொள்ளை போகுதே, மனோஜ் பாரதிராஜாவின் அல்லி அர்ஜூனா, அஜீத்தின் தாயாராக நடித்த படம் ராஜா,
ஸ்டைல், காலாட்படை, அன்பு தனது தனித்துவமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார்.

2003ல் வெளியான அன்பு என்ற படமே இவருக்கு கடைசி படம். 1982ல் சசிக்குமார் இயக்;கத்தில் கோரி தரிச்சநாள் என்ற மiலாயளப்படத்தில் அறிமுகமானார். ஜோதியின் திருமண வாழ்க்கை சிறப்பாக இல்லை. தம்பதிகள் பிரிந்துவிட்டனர். ஜோதிக்கு அசீரா என்ற மகள் உள்ளார். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜோதி 2004ல் காலமானார்.

 

Published by
sankaran v

Recent Posts