அஜித்லாம் பேசவே மாட்டாரு! விஜய் வெட்கப்படுவாரு.. 90களில் குத்தாட்டம் போட்ட நடிகை சொன்ன சீக்ரெட்
Ajith Vijay: கோலிவுட்டை பல ஆண்டுகளாக ரஜினி, கமலுக்கு பிறகு கட்டி காத்து வருபவர் நடிகர் விஜயும் அஜித்தும்தான். இருவருமே 90களில் தன் சினிமா பயணத்தை ஆரம்பித்தவர்கள். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக வெற்றி நடிகர்களாக இன்று வரை திகழ்ந்து வருகிறார்கள்.
அதில் விஜய் இந்த சினிமாவிற்கு வந்து இன்றுடன் 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதில் இருந்தே விஜய் தொடர்ந்து இந்த சினிமாவில் இருந்து வருகிறார். இருவரின் படங்கள்தான் சினிமா ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகின்றன.
இதையும் படிங்க: கமலின் செண்டிமெண்ட் இந்தப் படத்திலும் ஒர்க் அவுட் ஆகுமா? ‘அமரன்’ பேருக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயமா
இதில் விஜய் அரசியலுக்கு செல்ல இருப்பதால் சினிமாவில் இனி நடிக்க மாட்டேன் என முடிவெடுத்திருக்கிறார். அஜித் நடித்துக் கொண்டிருந்தாலும் அவரின் சமீபகால செய்கைகள் பிரபலங்கள் உட்பட ரசிகர்களையும் வெறுப்புக்குள்ளாக்கியிருக்கிறது. அதற்கு காரணம் விஜயகாந்த் மறைவு.
அஜித் ஒரு வேற்றுக்கிரகவாசி என்றே சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.இந்த நிலையில் 90களில் மிகவும் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருந்தவர் ஜோதிமீனா. இவர் புகழ்பெற்ற நடிகையான ஜோதி லட்சுமியின் மகள். அம்மாவைப் போலவே ஜோதிமீனாவும் நடனம் ஆடுவதில் மிகச்சிறந்த நடிகையாக வலம் வந்தார்.
இதையும் படிங்க: எத்தனை பேர் வந்தாலும் உன்ன போல வருமா!.. சலிக்காத அழகை காட்டி இழுக்கும் சமந்தா..
அஜித், விஜய் , கார்த்திக் போன்ற பல நடிகர்களின் படங்களில் ஜோதிமீனா ஆட்டம் இல்லாமல் அவர்களின் படம் இருக்காது. ஆனால் அவரது அம்மாவை பொறுத்தவரைக்கும் ஜோதிமீனாவை எப்படியாவது ஹீரோயினாக்க வேண்டும் என்றுதான் ஆசையாம்.
அந்த வகையில் சிந்து நதிப்பூ என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தும் ஜோதிமீனா தனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டாராம். அதன் பிறகே நடனத்தில் ஆர்வம் காட்டியிருக்கிறார். அந்த காலத்தில் விஜய் அஜித் என இருவருடனும் சேர்ந்து நடனம் ஆடிய ஜோதிமீனா அஜித் அவ்வளவாக பேசமாட்டார் என்றும் எனக்கும் அஜித்துக்கும் அந்தளவு பழக்கம் இல்லை என்றும் விஜய் மிகவும் வெட்கப்படுவார், கூச்சப்படுவார் என்றும் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: அஜித் போட்ட விதை! ஓடோடி வந்து ஒரு கோடி கொடுத்த உதயநிதி – இதன் பின்னணி தெரியுமா?