Jyothika: சமீப காலமாக சூர்யா மற்றும் ஜோதிகா கோயில் கோயிலாக சுற்றுவதை பார்க்க முடிகிறது. அதுவும் கங்குவா படத்தின் கடும் விமர்சனத்திற்கு பிறகு இவர்கள் இந்த மாதிரி கோயில்களுக்கு செல்வது ரசிகர்களுக்கு ஒரு வித சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது .ஒரு வேளை இதுவரை இல்லாத விமர்சனங்கள் இப்போது எழுவதால் இது ஒரு கண் திருஷ்டியாக கூட இருக்கலாம் என்று நினைத்து கூட சூர்யாவும் ஜோதியாகவும் கோயில்களுக்கு சென்று நிம்மதியை தேடி வருகிறார்கள் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதுவும் இந்திய சினிமாவில் எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படமாக கங்குவா திரைப்படம் இருந்தது .அதற்கு காரணம் ஞானவேல் ராஜா கொடுத்த பில்டப் தான். படம் கண்டிப்பாக 2000 கோடி வசூல் பெரும் என அவர் சொன்னதிலிருந்து ஒட்டுமொத்த திரை துறையும் அந்த படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்தியன்2 படத்தைப் போலவே கங்குவா படமும் ரசிகர்களை மொத்தமாக ஏமாற்றியது.
இந்தியன் 2க்கு கிடைத்த விமர்சனத்தைப் போல் பல மடங்கு விமர்சனத்தை கங்குவா படம் சந்தித்தது. அது மட்டுமல்ல கங்குவா படம் இந்த அளவு தோல்வி அடைந்ததற்கு பல்வேறு தரப்பினர் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்குப் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் கூறி வருகிறார்கள். சில பேர் வேண்டுமென்றே இந்த படத்தை டேமேஜ் செய்து இருக்கிறார்கள் என்றும் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய் பண்றது கருவாட்டு சாம்பாருனா!.. நீங்க பண்றதுக்கு பேர் என்ன?!.. தளபதிக்காக சீமானிடம் பொங்கிய பிரபலம்!..
ஆனால் சூர்யாவின் கேரியரில் யாரும் எதிர்பார்க்காத ஒரு டிஸ்சாஸ்டர் படமாக இந்த கங்குவா திரைப்படம் விளங்கியது. இந்த நிலையில் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதனை அடுத்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் அவருடைய 45 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் பூஜை இன்று பொள்ளாச்சியில் உள்ள மாசாணியம்மன் கோயிலில் வைத்து போடப்பட்டிருக்கிறது.
இதுவும் ஒருவித சர்ச்சையை கிளப்பியது. மங்களகரமாக கோவிலில் வைத்து ஆரம்பித்தால் படம் நல்ல ரிசல்ட் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் கோயிலில் வைத்து பூஜை போட்டிருக்கின்றனர் எனவும் கூறி வந்தனர். இதற்கிடையில் இன்று அதிகாலை ஜோதிகா திருப்பதி ஏழுமலையான் கோயிலை தரிசனம் செய்யும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது .

இதையும் படிங்க: நீங்க வேற லெவல்!.. அது என்னால முடியாது!.. பார்த்திபனுடன் நடிக்க மறுத்த ரஜினி!..
அவர் மட்டும் இன்று திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். பச்சை நிற பட்டுப்புடவையில் மிகவும் மங்களகரமாக கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்த ஜோதிகாவின் வீடியோ வைரலாகி வருகின்றது. ஜோதிகாவை பார்த்து ஒரு பெண் ரசிகை ஒருவர் ஓடி வந்து அவரின் கையை பிடிக்க அதற்கு ஜோதிகா என்னால் கை இப்பொழுது கொடுக்க முடியாது எனக் கூறினார்.
அதற்கு காரணம் ஒரு கையில் பிரசாதத்தையும் இன்னொரு கையில் அவருடைய சேலை முந்தானை ஆகியவற்றையும் பிடித்துக் கொண்டு நடக்க முடியாமல் நடந்து வந்தார் ஜோதிகா. அதன் காரணமாகவே தான் மிகவும் வேண்டுகோளுடன் அந்த ரசிகையிடம் கூறினார் ஜோதிகா.
