நான் பண்ண தப்பு! அத சரி செய்யத்தான் ‘வாலி’ படத்துல நடிச்சேன் - என்ன சொல்றீங்க ஜோதிகா?

jyothika
Actress Jyothika: தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. தனது குறும்புத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர். அஜித், விஜய், கமல், ரஜினி, சூர்யா என முக்கியமான நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர்.
சூர்யாவை காதலித்து திருமணம் செய்த ஜோதிகா கொஞ்ச நாள்கள் சினிமாவை விட்டு விலகியிருந்தார். அதன் பிறகு ராட்சசி 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். பெண்களை மையப்படுத்தி வெளிவந்த அந்தப் படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: புது கதையெல்லாம் செட்டாகல.. பழசையே தூசு தட்டுவோம்.. என்னங்க கார்த்தி இப்படி இறங்கிட்டீங்க..!
இதனால் ஜோதிகாவுன் செகண்ட் இன்னிங்ஸ் வெற்றிகரமாக ஆரம்பமானது. தொடர்ந்து ராட்சசி, காற்றின் மொழி போன்ற படங்களில் நடித்து மேலும் மக்களின் அபிமானங்களை பெற்ற நடிகையாக வலம் வந்தார் ஜோதிகார்.
சமீபத்தில் கூட மலையாளத்தில் மம்மூட்டியுடன் சேர்ந்து காதல் தி கோர் என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படம் இந்திய அளவில் பாராட்டப்பட்ட படமாக அமைந்தது. இந்த நிலையில் ஒரு பேட்டியில் தன் அனுபவங்கள் குறித்து ஜோதிகா பல சுவாரஸ்ய தகவல்களை கூறினார்.
இதையும் படிங்க: எனக்கு ஒன்னும் தர மாட்டீங்களா?!.. எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிய ஒரே பரிசு அதுதான்!..
தமிழில் அவர் வாலி என்ற திரைப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார். ஆனால் உண்மையிலேயே வாலி படத்தில் சிம்ரன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியிருந்தது ஜோதிகாதானாம். எஸ்.ஜே. சூர்யா இந்த கேரக்டருக்கு அழைத்த போது ஓகே என சொல்லியிருக்கிறார்.
அந்த நேரத்தில் ஹிந்தியில் ஒரு பட வாய்ப்பு வந்ததால் அங்கு நடிக்க சென்று விட்டாராம். அதன் பிறகே சிம்ரன் நுழைந்திருக்கிறார். இருந்தாலும் எஸ்.ஜே.சூர்யா ஜோதிகாவை விடவில்லை. மறுபடியும் ஜோதிகாவிடம் சென்று ‘ஒரு சின்ன கெஸ்ட் ரோல். அதிலாவது நடிக்க முடியுமா’ என கேட்டாராம்.
இதையும் படிங்க: அப்பாவுக்காக கொஞ்சமா செஞ்சாலும் தப்பு தான் முத்து… கூட்டத்தில் மொத்தமாக ரவிக்கு, மனோஜுக்கும் ஆப்பா..!
அதற்கு ஜோதிகா ‘அது என்னுடைய தவறுதான். அதனால் சின்ன ரோலாக இருந்தாலும். நான் நடித்துக் கொடுக்கிறேன்’ என முதலில் நடிக்காமல் போனதற்கு பதிலாக இந்த சின்ன கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்தாராம் ஜோதிகா.