கொஞ்சம் கூடியிருச்சு! அதுக்கு இப்படியா? ஜோதிகாவின் அடுத்த கட்ட ஃபிட்னஸ்

by Rohini |   ( Updated:2024-08-15 07:01:48  )
jyothika
X

jyothika

Jyothika: கோலிவுட்டில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக ஹீரோயினாகவே இந்த தமிழ் சினிமாவில் இருந்து தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் ஜோதிகா. அஜித், விஜய், சூர்யா என டாப் நடிகர்களுடன் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார். ஜோதிகா.

சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமலேயே இருந்தார். அதன் பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் ஒரு சரியான கம்பேக்காக கொடுத்தார். பெண்களுக்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்லும் படமாக 36 வயதினிலே திரைப்படம் அமைந்து ஜோதிகாவிற்கு ஒரு நல்ல வெற்றியை கொடுத்தது.

இதையும் படிங்க: உன்னா பாத்தாலே மூடு மாறுது செல்லம்!.. சைனிங் உடம்பை காட்டி இழுக்கும் பிரியங்கா மோகன்…

அதிலிருந்தே ராட்சசி, காற்றின் மொழி போன்ற படங்களில் நடித்து மீண்டும் இந்த சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் மம்மூட்டியுடன் இணைந்து காதல் தி கோர் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார் ஜோதிகா.

அந்தப் படத்திலும் ஜோதிகாவின் கேரக்டர் அனைவருக்கும் ரசிக்கும் படியாக இருந்தது. அதன் பின் ஹிந்தியிலும் படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தாலும் அந்தப் படங்களில் தனக்கான கேரக்டர் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அடிப்படையாக கொண்டே படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஜோதிகா.

இதையும் படிங்க: கமல் எப்பவோ இத ட்ரை பண்ணிட்டாரு! தங்கலான் பற்றி பிரபலம் சொன்ன தகவல்

இதற்கிடையில் தனது ஃபிட்னஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். 40 வயதை கடந்தாலும் இப்பொழுதும் அவரது இளமை குறையாமல் பார்த்துக் கொள்கிறார். அதற்காக கடும் உடற்பயிற்சிகளை செய்தும் வருகிறார் ஜோதிகா.

இந்த நிலையில் இன்று உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார் ஜோதிகா. முன்பை விட கொஞ்சம் வெயிட் போட்ட மாதிரி தெரிந்தாலும் கடும் பயிற்சிகளை எடுத்து வருகிறார். அந்த வீடியோதான் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: மூணுல ஒன்னு.. வெளியேறிய எழில்… உளறாதீங்க மனோஜ்… சிக்க போகும் கதிர்!..

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/C-ri4vQSSX8/?igsh=MWY0NXNzcmJpcTAydw==

Next Story