வாலி படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்தவர்தான் ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்க துவங்கினார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து மனதில் இடம்பிடித்தார். துறுதுறு கண்களும், குழந்தை போன்ற முகமும் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.

ரஜினி, கமல், விக்ரம், சிம்பு என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். ஆனால், சூர்யாவுடன் அவருக்கு கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட் ஆனது. காக்க காக்க, சில்லுன்னு ஒரு காதல், பேரழகன், மாயாவி உள்ளிட்ட சில படங்களில் அவருடன் நடித்தார். அதிக படங்களில் சேர்ந்து நடித்ததால் இருவருக்கும் இடையே காதல் உருவானது.

இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜோதிகா திருமணத்திற்கு பின் 36 வயதினிலே, ராட்சசி, காற்றி மொழி, ஜாக் பாட, காதல் தி கோர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடிக்க சம்மதம் சொல்கிறார்.

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் கூட நடிக்க ஜோதிகாவுக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், மறுத்துவிட்டார். திருமணத்திற்கு பின்னரும் கடுமையான உடற்பயிற்சிகள் செய்து உடலை சிக்கென பராமரித்து வருகிறார். அவ்வபோது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவுக்காக மும்பை சென்றிருந்த ஜோதிகா நச்சென்ற உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

