த்ரிஷா, நயன்தாரா பேரை சொல்லியே அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டாங்க! - நடிகை அலறல்
சன் மியூசிக்கில் தன் வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை காஜல் பசுபதி. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில வேடங்களில் நடித்தார். அவர் நடித்ததில் முக்கியமான படங்களாக அமைந்தது கோ, மௌனகுரு, கதம் கதம், ஆயிரத்தில் இருவர் போன்ற படங்களாகும். இவர் பெரும்பாலும் போலீஸ் மற்றும் எதிர்மறை வேடங்களில் நடித்து மக்களிடையே பரீட்சையமானவர்.
இவர் சமீபத்தில் ஒரு படத்தில் நடித்து அந்த படத்தில் சில பிரச்சினை காரணமாக இப்போது ஊடகத்தை நம்பி அந்த பட யூனிட்டில் நடக்கும் அவலங்களை கூறிவருகிறார். அதாவது 20 நாள்கள் கால்ஷீட் என அந்த படத்தின் பெயரை கூட சொல்லாத காஜல் அவர் நடித்ததற்கான் பணத்தை கேட்டாராம். ஆனால் அவர்கள் கொடுக்க மறுத்ததாகவும்
அவருடன் வந்த உதவியாளரை கூட காஜலுக்கு தெரியாமல் ரயிலில் அனுப்பி வைத்து விட்டு இவரை தனியாக விட்டு விட்டதாகவும் கூறினார். மேலும் அது சம்பந்தமான மேனேஜர், இயக்குனர் எல்லாமே ஒரு திட்டத்தோடுதான் இருக்கிறார்கள் என்றும் கூறினார்.
மேலும் அந்த பட யூனிட்டில் ஏதோ ஒன்று தப்பாக நடக்கிறது என்றும் கூறினார். அதுமட்டுமில்லாமல் அந்த படத்தின் ஹீரோயினிடமும் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி கேட்டார்களாம். ஆனால் அந்த ஹீரோயின் மறுத்து விட்டாராம்.அதற்கு அந்த படத்தின் ஊழியரான மன்சூர் என்பவர் த்ரிஷா மற்றும் நயன் எல்லாருமே அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து தான் வந்திருக்கிறார்கள்,
நீ என்ன? இடம் கொடுக்க மாட்டீக்க என்று அந்த ஹீரோயினிடம் கேட்டாராம். மேலும் த்ரிஷா மற்றும் நயனுக்கு நிறைய வீடுகளை பல பேர் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள், ஒத்துக் கொள் என்று மிகவும் கொடுமை படுத்துவதாகவும் கூறினார். அதனால் இது சம்பந்தமாக நான் நீதிமன்றத்தை நாட போகிறேன் என்றும் காஜல் கூறினார்.