இவரின் மரணம்தான் கனகாவை இந்த அளவுக்கு பாதித்ததா? காதலால் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் அவலம்

by Rohini |   ( Updated:2023-07-27 10:16:04  )
kanaga
X

kanaga

தமிழ் திரையுலகில் மிகவும் முக்கியமான நடிகையாக கருதப்பட்டவர் நடிகை கனகா. தமிழில் கரகாட்டக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார். அவரை அறிமுகப்படுத்தியதே கங்கை அமரன் தான். ஆனால் சினிமாவில் நடிக்க முதலில் கனகாவின் தாயான தேவிகா முதலில் எதிர்ப்பு தெரிவித்தாராம்.

கங்கை அமரனும் தேவிகாவும் அருகருகே தான் குடியிருந்தார்களாம். அதனால்தான் கனகாவை பார்த்த கங்கை அமரன் தேவிகாவிடம் தன்னுடைய கரகாட்டக்காரன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க கனகாவை கேட்டிருக்கிறார்.

kanaga1

kanaga1

இப்படித்தான் அந்தப் படத்தில் அறிமுகமாயிருக்கிறார். அந்தப் படத்தின் வெற்றி கனகாவை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த கனகாவை தன்னுடைய உறவினராகவே மக்கள் ஏற்றுக்கொண்டனர்.

எந்தப் படமானாலும் படப்பிடிப்பு கனகாவுடன் அவரது தாயார் தேவிகா வருவாராம். தேவிகாவின் அரவணைப்பிலேயே தான் கனகா இருந்து வந்திருக்கிறார். ஒரு நேரத்தில் தேவிகா இறந்து விட தனிமரமாக இருந்திருக்கிறார் கனகா. சொல்லப்போனால் வெளியுலகம் தெரியாத வகையில் தான் கனகா இருந்திருக்கிறார்.

இதனை அறிந்த ஒரு புரடக்‌ஷன் மேனேஜர் ஒருவர் அவருக்கு தெரிந்த ஒரு இளைஞரை கனகாவுக்கு உதவியாளராக அமர்த்தியிருக்கிறார். கனகாவின் கால்ஷீட், சம்பளம் எல்லாம் அவரே தான் பார்த்துக் கொண்டாராம். அது கனகாவின் மீது காதலையும் ஏற்படுத்தியிருக்கிறது.

kanaga2

kanaga2

ஒரு தலைக் காதலாக சென்று கொண்டிருக்கையில் அந்த நபர் தன் மீது வேறொரு எண்ணத்தில் நெருங்க முயல்கிறார் என கனகா தவறாக புரிந்து கொண்டு அந்த நபரை வீட்டை விட்டு வெளியேற்றியிருக்கிறார். அவரும் வீட்டை விட்டு வெளியே வர ஒரு கட்டத்தில் அந்த நபர் ஒரு விபத்தில் இறந்து விட்டாராம்.

இதையும் படிங்க : சூர்யாவை காதல் பரத்தா மாத்தாம இருந்தா சரி! ‘கங்குவா’ படத்தில் இப்படி ஒரு ஐடியாவ கொடுத்த புண்ணியவான்

அவர் இறந்த பிறகு தான் கனகாவிற்கே உண்மை தெரிந்ததாம் அவர் தன்னை காதலித்த விவகாரம். இந்த மன உளைச்சலில் தான் கனகா வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடப்பதாகவும் யாரையும் பார்க்க விரும்பவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த சுவாரஸ்ய தகவலை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.

Next Story