முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங் கொடுத்த பிரபல நடிகை… யாருன்னு பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க…
கடந்த 2002 ஆம் ஆண்டு சுசி கணேசன் இயக்கத்தில் வெளிவந்த “ஃபைவ் ஸ்டார்” திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் கனிகா. அதன் பின் “எதிரி”, “ஆட்டோகிராஃப்”, “வரலாறு” என பல திரைப்படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் நடிகை மட்டுமல்லாது ஒரு பின்னணி பாடகரும் கூட. இவர் அறிமுகமான “ஃபைவ் ஸ்டார்” திரைப்படத்திலேயே இவர் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
மேலும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் வந்திருக்கிறார். அதே போல் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “எதிர் நீச்சல்” என்ற தொடரில் ஈஸ்வரி என்ற கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
இவ்வாறு பன்முக கலைஞராக திகழும் கனிகா, பல முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்திருக்கிறார் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம்!
கடந்த 2005 ஆம் ஆண்டு சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான “அந்நியன்” திரைப்படத்தில் நடிகை சதாவிற்கு குரல் கொடுத்தவர் கனிகாதான். அதே போல் விஜய் நடித்த “சச்சின்” திரைப்படத்தில் ஜெனிலியாவிற்கு குரல் கொடுத்தவரும் இவர்தான்.
மேலும் ரஜினி நடித்த “சிவாஜி” திரைப்படத்தில் ஸ்ரேயாவுக்கும், சமீபத்தில் வெளியான “வாரியர்” திரைப்படத்தில் கிரீத்தி ஷெட்டிக்கும் பின்னணி குரலாக ஒலித்தவர் கனிகா. சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கனிகா “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நந்தினியாக நடித்திருந்த ஐஸ்வர்யா ராயிற்கு பின்னணி குரல் கொடுக்கும் வாய்ப்பு வந்தது குறித்து பேசியுள்ளார்.
அதில் “பொன்னியின் செல்வனில் நந்தினி குரலுக்கான ஆடிஷனுக்கு சென்றிருந்தேன். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி என்னால் செய்யமுடியவில்லை. ஆதலால் ஐஸ்வர்யா ராயிற்கு குரல் கொடுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை” என கூறியுள்ளார்.