மாலத்தீவு கடற்கரையில் 'எதிர்நீச்சல்' கனிகா.. செலவு மட்டும் இம்புட்டா? வெளியான அட்டகாசமான வீடியோ!

by muthu |   ( Updated:2023-05-25 15:01:28  )
மாலத்தீவு கடற்கரையில்  எதிர்நீச்சல் கனிகா.. செலவு மட்டும் இம்புட்டா?   வெளியான அட்டகாசமான வீடியோ!
X

நடிகை கனிகா மாலத்தீவு கடற்கரையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து தற்போது சீரியலில் நடித்து வருபவர் நடிகை கனிகா. மதுரையை சார்ந்த இவர் 5 ஸ்டார் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.



பின் நடிகர் அஜித்துடன் வரலாறு (2006) படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆனார். ஆட்டோ கிராப், எதிரி படங்களிலும் நடித்துள்ளார்.

ஷங்கரின் அந்நியன், சிவாஜி, சச்சின் படங்களின் ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியவர் தான் கனிகா. மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம், சுரேஷ் கோபி, மம்முட்டி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.



சமீபத்தில் தமிழில் விஜய் சேதுபதி நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் கனிகா நடித்து இருந்தார். நடிகை கனிகா தற்போது சன் டிவியின் எதிர் நீச்சல் மெகா தொடரில் தற்போது நடித்து வருகிறார்.



சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் கனிகாவும் ஒருவர். நடிகை கனிகா, அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டவர்.

இந்நிலையில் நடிகை கனிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவு கடற்கரையில் இருக்கும் புகைப்படங்களையும், கடலில் நீச்சல் அடித்து ஆழகடலை ரசிக்கும் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். மேலும் தான் Sun Siyam Olhuveli கடற்கரை விடுதியில் தங்கி இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். 18,000 ரூபாய் முதல் 65,000 ரூபாய் வரை இந்த விடுதியில் தங்க வாடகையாக வசூலிக்கப்படுகிறது.

Next Story