Connect with us

Entertainment News

உன் கட்டழகை பார்த்து மெர்சல் ஆயிட்டோம்!. ரசிகர்களை கிறங்கவைக்கும் கனிகா…

திவ்யா என்பது இவரின் சொந்த பெயர். இவர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். சிறுவயது முதலே பாடுவதில் அதிக ஆர்வம் கொண்டதால் முறைப்படி இசையும் கற்றுக்கொண்டார். பள்ளியில் படிக்கும் போது பாப் மற்றும் லைட் மியூச்சிக் என சில நிகழ்ச்சிகளில் பாடியும் இருக்கிறார். ஒருகட்டத்தில் அவருக்கு மாடலிங் துறையிலும் ஆர்வம் வந்தது.

kaniha

ஒரு புத்தகத்தின் அட்டை படத்தில் இவரை பார்த்த இயக்குனர் சுசி கணேசன் அவர் இயக்கிய ஃபைவ் ஸ்டார் படத்தில் இவரை அறிமுகம் செய்து வைத்தார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்தில் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

kaniha

அதன்பின் எதிரி, ஆட்டோகிராப், வரலாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அஜித் நடித்த வரலாறு படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஒருபக்கம், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்தார். வரலாறு படத்திற்கு பின் திருமணம் செய்து கொண்டார்.

kaniha

இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். திருமணத்திற்கு பின் தொடர்ந்து மலையாள படங்களில் மட்டும் நடித்து வந்தார். குணச்சித்திர நடிகையாகவும் மாறிவிட்டார். திடீரென தமிழ் சீரியலில் நடிக்க துவங்கினார். மேலும், இப்பவும் சிக்கென வைத்திருக்கும் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.

kaniha

மேலும், அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றும் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இப்போது இலங்கை சென்றுள்ள கனிகா அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

kaniha

google news
Continue Reading

More in Entertainment News

To Top