ஏன் அவசரப்பட்டு கல்யாணம் பண்ணீங்க?. கனிகா பதிவிட்ட வீடியோவால் குமுறலில் ரசிகர்கள்!..
வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு தாவி அங்கு ஒரு நிலையான கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவோடு வலம் வருபவர் நடிகை கனிகா.
தமிழில் ஃபை ஸ்டார் படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமான கனிகா ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
அதிலும் குறிப்பாக ‘ஈஸ்வரி உன்ன கல்யாணம் செஞ்சிக்க ஆசைப்படுறேன்’ என்ற பாடல் 90ஸ் கிட்ஸ் மனதில் மறக்காமல் இருக்காது.
அதன் பின் அஜித்திற்கு ஜோடியாக வரலாறு படத்தில் நடித்து ஓரளவு மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்று வந்தார். இதனிடையே ஏராளமான படங்களில் டப்பிங்கும் பேசியுள்ளார்.
கந்தசாமி படத்தில் நடிகை சதாவுக்கு டப்பிங் பேசியதே இவர்தானாம். இப்படி பல கோணங்களில் ஜொலித்து வந்த கனிகா சமூக வலைதள பக்கத்தையும் விட்டு வைக்கவில்லை. நாள்தோறும் அவரின் கவர்ச்சி புகைப்படங்கள், அவுட்டிங் போன புகைப்படங்கள் என பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார். அதில் ஒரு ரசிகர் இந்த வீடியோவை பார்த்து ‘அவசரப்பட்டு ஏன் கல்யாணம் பண்ணீங்க’னு கேட்டு தன் ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்.
இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/ClOeQNsp-5w/?utm_source=ig_web_copy_link