இயக்குனர் சங்கரால் ஏமாந்த பிரபல நடிகை...! படப்பிடிப்பில் நடந்த அநியாயத்தின் உச்சக்கட்டம்...
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் பெரும்பாலும் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு மக்களுக்கு பிடித்த மாதிரி கொண்டு போய் சேர்ப்பதே இவரின் முக்கிய நோக்கமாக இருக்கும்.
ஜெண்டில்மேன், காதலன், அந்நியன், இந்தியன், முதல்வன் போன்ற இவரின் படங்கள் காலத்திற்கும் பேசப்படும் படங்களாகும். அதே சமயம் தரம் வாய்ந்ததாகவும் பல தொழில் நுட்பங்களை பயன்படுத்தியும் வித்தியாசமாக கொடுப்பதில் வல்லவர்.
இதையும் படிங்கள் : 80களில் உருக உருக காதலித்த ஒரு தலை காதல் நடிகர் இப்போது என்ன செய்கிறார்?
இந்த நிலையில் அந்நியன் படத்தால் நான் ஏமாந்து விட்டேன் என்று பிரபல நடிகை கன்னிகா கூறியுள்ளார். இவர் பிரசன்னா நடித்த 5ஸ்டார் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். வரலாறு படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருப்பார். மேலும் ஏராளமான படங்களிலும் நடித்திருக்கிறார்.
இவர் மாதவனின் படத்தில் மாமியா நடித்து நன்றாக பேசி அசத்தியிருப்பார். இதை பார்த்து தான் ஷங்கர் அலுவலகத்தில் இருந்து இவருக்கு அழைப்பு வந்ததாம். உடனே கன்னிகா ஷங்கர் சார் படத்தில் நடிக்க வாய்ப்பா என ஆச்சரியத்தில் திளைக்க அந்நியன் படத்தில் நடிகை சதாவுக்கு டப்பிங் பேசதான் இவரை அணுகியுள்ளனர். ஒரு நிமிஷம் ஏமாந்து விட்டேன் எனக் கூறி அடுத்து டப்பிங் நான் தான் பேசுனேன் என கூறினார்.