More
Categories: latest news

Kasthuri: ஜாமினில் வெளிவந்த கஸ்தூரி… சிறுகுரலை சீறும் புயலா மாத்திட்டாங்களாம்!

நடிகை கஸ்தூரி அடிக்கடி சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகும் வகையில் ஏதாவது ஒரு கருத்தை பேசி சர்ச்சையில் சிக்கி விடுகிறார். இது ஒரு பக்கம் இவரது தைரியத்தைக் குறித்தாலும் இவருக்கே சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகிறது.

சமீபத்தில் தெலுங்கர்கள் குறித்து இவர் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. சிறையில் போய் கம்பி எண்ணும் அளவுக்குப் போய்விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு என்ன நடந்தது என்று பார்ப்போம்.

Advertising
Advertising

சர்ச்சை பேச்சு

Also read: நடிகையிடம் புலி!.. அப்பாவிடம் பூனை!.. எந்த சினிமா ஜோடியை சொல்கிறார் சாய்ரா பானு வக்கீல்?..

சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தெலுங்கர்கள் பற்றி நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சையானது. நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் போலீஸில் வழக்கு பதிந்தனர்.

தலைமறைவாக

நடிகை கஸ்தூரி சர்ச்சையாகப் பேசியதும் கண்டனங்கள் வெடித்தன. அப்போது ஆந்திராவில் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்பட்டது. அதன்பிறகு ஐதராபாத்தில் ஒரு தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.

அதன்பிறகு அவரை தமிழக போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். முதலில் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அரசியல் வித்தியாசம் பாராமல்

புழல் சிறையில் அடைத்தனர். கோர்ட் ஜாமீன் வழங்கியதால் அங்கு இருந்து நிபந்தனை ஜாமீனில் கஸ்தூரி ரிலீஸ் செய்யப்பட்டார். என்னைக் குடும்பம் போல் பாதுகாத்த நண்பர்களுக்கு நன்றி. எனக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு நன்றி. அரசியல் வித்தியாசம் பாராமல் எனக்காக பேசிய தலைவர்களுக்கு நன்றி. ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி சொன்னார். சோஷியல் மீடியாவுக்கும் நன்றி சொன்னார்.

மிகப்பெரிய நன்றி

தொடர்ந்து ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் நன்றி சொன்னார். என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி. ஆந்திரா, தெலுங்கானா மக்களுக்கு மிகப்பெரிய நன்றி. என்னை சிறையில் நன்றாக நடத்தினார்கள்.

Also read: விஜய் நம்மாளுதான்… கேட்டா கண்டிப்பா கொடுப்பாரு!.. சத்யராஜ் செம கலாய்…..

எல்லாவற்றுக்கும் மேலாக சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றியதற்கு நன்றி என்று சொன்னார். சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவருக்குப் பொன்னாடையைப் போர்த்தினார்கள். கஸ்தூரி வாழ்க என கோஷம் எழுப்பினர்.

Published by
sankaran v

Recent Posts