Connect with us

அந்த அம்மையாரிடம் தோத்த காண்டுல ஆண்டவர் இப்படி பாடிட்டாப்ல.! வெளுத்து வாங்கிய ஏடாகூட நாயகி.!.

Cinema News

அந்த அம்மையாரிடம் தோத்த காண்டுல ஆண்டவர் இப்படி பாடிட்டாப்ல.! வெளுத்து வாங்கிய ஏடாகூட நாயகி.!.

கமல் நடிப்பில் நீண்ட நாள் கழித்து பக்கா கமர்ஷியல் படமாக விக்ரம் படம் தயாராகி விட்டது. இந்த திரைலாடத்தை காண ஜூன் 3 எப்போது வரும் என ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவே காத்து கிடக்கிறது. இந்த படத்தை கமலின் தீவிர ரசிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. அதற்கு முன்னர் இந்த படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகி உள்ளது.

நேற்று இரவு முதல் இந்த பாடல் தான் இணையம் முதல் தொலைக்காட்சி வரை தலைப்பு செய்தியாக மாறி வருகிறது. இந்த பாடலை  கமலே எழுதி பாடியிருந்தார். அதில் நிறைய அரசியல் கருத்துக்களை தரலோக்கல் பாணியில் பாடி பலரையும் கவர்ந்துவிட்டார்.

இதையும் படியுங்களேன் – பாக்யராஜ் மகனை இப்படி வச்சி செஞ்சுட்டாங்களே.! பதறி போய் சரண்டர் ஆயிட்டார்.! பின்னணி இதோ..

இந்த பாடல் பற்றி பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் கஸ்தூரி தனது வழக்கமான சர்ச்சை கருத்தை தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ சகலகலாவல்லவன் + மார்க்கண்டேயன் = கமல்.! வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் lyricsல இறக்கிட்டாப்ல. ‘ஒன்றியம்’ ங்குற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல. கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு!  .’ என பதிவிட்டுள்ளார்.

கோயம்புத்தூரில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வானதி ஸ்ரீனிவாசனிடம் கமல் தோல்வியுற்றதை குறிப்பிட்டு தான் கமல் இப்படி எழுதியுள்ளார். என பலவாறு புயலை கிளப்பியுள்ளார் கஸ்தூரி. இவர் கமலை மட்டுமல்ல, தனது சர்ச்சையான கருத்துக்களால், ரஜினி, சிவகுமார் என பலரை வம்பிழுத்துள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top