ஆண்ட்டின்னு எவன் சொன்னான்!.. பாவாடை தாவணியில் அழகை தூக்கலா காட்டும் கஸ்தூரி!...
ஆத்தா உன் கோவிலிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கஸ்தூரி. 1992ம் வருடத்துக்கான மிஸ் மெட்ராஸ் அழகி படத்தை வென்றவர் இவர். முதலில் கஸ்தூரி நுழைந்தது மாடலிங் துறையில்தான். துவக்கத்தில் சின்ன பட்ஜெட் படங்களில் நடிக்க துவங்கினார்.
90களில் பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். கமலுடன் இந்தியன் படத்திலும் நடித்திருந்தார். ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொண்டு 2 குழந்தைகளுக்கு தாயானார். அதன்பின் சினிமாவில் அவரை பார்க்க முடியவில்லை. சில வருடங்களுக்கு பின் தன்னை தேடி வரும் படங்களில் மட்டும் நடிக்க துவங்கினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் சமூக பிரச்சனைகளை பேசும் சமூக ஆர்வலராகவும் மாறினார். அரசியல் கட்சிகளை விமர்சிக்க துவங்கினார். இதனால், அவருக்கு பலத்த எதிர்ப்பும் எழுந்தது. ஆனாலும், சளைக்காமல் சமூகவலைத்தளங்களில் களமாடி வருகிறார்.
தொலைக்காட்சிகளில் பல விவாத நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். அஜித் ரசிகர்களுடன் நிறைய சண்டை போட்ட நடிகை கஸ்தூரியாகத்தான் இருக்கும். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
இப்போதும் மாடலிங் துறையில் ஆர்வமிருக்கும் கஸ்தூரி அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், ஒரு புதிய படத்தில் தாவணி பாவாடை அணிந்து நடித்திருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.