கட்டிய புருஷனே சொல்லிட்டாரு... இனி அந்த மாதிரி சீன்ல வெளுத்து வாங்கப் போகும் ஆனந்தி

Kayal Aanandhi
பொதுவாக தென்னிந்திய நடிகைகள் திருமணம் ஆகி விட்டால் போதும். சினிமாவில் இருந்து ஒதுங்கி விடுவார்கள். ஒரு சில நடிகைகள் அத்திப் பூத்தாற்போல ஏதாவது இரண்டொரு படங்களில் தலையைக் காட்டுவார்கள். மற்றபடி முன்னணி நடிகைகள் பெரும்பாலும் நடிப்பதில்லை. அப்படியே நடித்தாலும் கவர்ச்சியாக நடிப்பதில்லை. ஆனால் இவர் கொஞ்சம் விதிவிலக்கு. யார் என்று பார்க்கலாமா...
குடும்பப்பாங்கான கேரக்டரில் நடிக்கும் ஹீரோயின்கள் பெரும்பாலும் கவர்ச்சி பக்கம் வருவதில்லை. ஆனால் எப்போதாவது இது போன்று நடிக்கும் சம்பவங்கள் நடப்பதுண்டு. தமிழ்ப்படங்களில் பிரபலமான தெலுங்கு நடிகை ஆனந்தி. இவர் ஒரு பாரம்பரியப் பெண்ணாக இருந்தாலும் விரைவில் வர உள்ள மங்கை என்ற படத்தில் தைரியமாக பல காட்சிகளில் நடித்துள்ளாராம். அதே போல டயலாக்குகளையும் பேசி இருக்கிறாராம்.

Kayal Aanandhi
ஆனால் முதலில் இந்தப் படத்தில் நடிக்க மறுத்தாராம். ஆனால் அவரது கணவர் படத்திற்கு அவசியம் என்றால் தைரியமாக நடி என்று ஊக்கம் கொடுத்தாராம். அதன்பிறகு தான் அந்தப் படத்தில் அதுபோன்ற காட்சிகளில் எளிதாக நடிக்க முடிந்தது என்கிறார்.
இவர் தெலுங்கானா வாரங்கல் பகுதியைச் சேர்ந்தவர். அங்கு மார்க்கெட் சரிய ஆரம்பித்ததும், சென்னைக்குக் குடிபெயர்ந்து விட்டார். இவருக்கு தமிழில் பல நல்ல படங்கள் கிடைத்தது. அதனால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றார். 2021ல சாக்ரடீஸ் என்ற இணை இயக்குனருடன் திருமணம் நடந்தது.
இதையும் படிங்க... என்னமோ செய்யப்போறாங்க!. துபாயில் பரிதாபங்கள் கோபி – சுதாகருடன் சிவகார்த்திகேயன்!. வைரல் வீடியோ..
தமிழில் கயல் படத்தில் நடித்து அசத்தியுள்ளார். இந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு கயல் ஆனந்தி என்ற பெயரே நிலைத்து விட்டது. பொறியாளன் படத்தில் அறிமுகம் ஆனார். விசாரணை, சண்டிவீரன், திரிஷா இல்லன்னா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, மன்னர் வகையறா, பரியேறும் பெருமாள் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.