Categories: Entertainment News

நகைக்கடை பொம்ம மாதிரி நச்சுன்னு இருக்க!…கீர்த்தி சுரேஷிடம் மயங்கிய ரசிகர்கள்…

சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார். ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார்.

ரஜினி நடித்த அண்ணாத்த மற்றும் சாணி காயிதம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா