இப்படியே போனா அரசியல் வெளங்கும்..! - விரைவில் நடிகை கீர்த்தி சுரேஷ் அரசியலில்?

by Brindha |   ( Updated:2023-06-27 21:27:45  )
keerthy-suresh
X

keerthy-suresh

மலையாள நடிகையின் மகளான நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய மொழி படங்களில் படு பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கிறார் இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் வட்டாரங்கள் உள்ளது.

இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான இவர் ஒரு வாரிசு நடிகை என்பதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காத போதும் காத்திருந்தது மிக நல்ல பலனை கொடுத்தது என்று கூறலாம்.

Keerthy Suresh on Twitter:

Keerthy Suresh

அந்த வகையில் இவர் காத்திருந்ததற்கு பலனாக தமிழில் சிவகார்த்திகேயனோடு இணைந்து ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த படம் இவருக்கு மாபெரும் வெற்றியை தந்ததோடு தமிழக இளைஞர்களின் மனதில் ஒரு குறிப்பிட்ட இடத்தையும் பெற்று தந்தது.

இதனைத் தொடர்ந்து இவருக்கு ரெமோ, பைரவா, தொடரி, சர்க்கார் போன்ற படங்களில் தமிழில் உச்சகட்ட நட்சத்திரங்களாக இருப்பவர்களோடு இணைந்து நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

தனக்கு கிடைத்த வாய்ப்புகளை தக்க முறையில் பயன்படுத்திக்கொண்ட இவர் மகாநதி என்ற திரைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியாக நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதன் மூலம் விருதினை பெற்றார்.

Decoding Keerthy Suresh's Look as Savitri in Mahanati

Keerthy Suresh

இடையில் சற்று உடல் எடை போட்ட நிலையில் தீவிரமாக ஒர்க் அவுட் செய்து பழைய நிலைக்கு திரும்பினார் இதனை அடுத்து இவர் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பலவிதமான செய்திகள் வெளி வந்தது.

தற்போது மாமன்னன் திரைப்படத்தில் அமைச்சர் உதயநிதியோடு இணைந்து நடித்திருக்கும் இவர் விரைவில் அரசியலில் களமிறங்கப் போவதாக செய்திகள் தீயாய் பரவி வருகிறது. குறிப்பாக அவர் விரைவில் திமுக கட்சியில் சேருவார் என்ற செய்தி தான் தற்போது காட்டு தீ போல பரவி வருகிறது.

keerthi

இந்த செய்தி எந்த அளவு உண்மை என்று தெரியாத நிலையில் ஏற்கனவே இவர் ஆந்திராவில் இதுபோல அரசியல் களத்தில் குதித்துள்ளதாக செய்திகள் வெளிவந்து அவை வெறும் வதந்தி என்ற விஷயம் தெரிய வந்தது அதுபோலவே இந்த விஷயம் இருக்குமா அல்லது இதன் உண்மை என்ன என்பது இனிவரும் நாட்களில் நமக்கு எளிதாக தெரிந்து விடும்.

Next Story