இது திருப்பி கொடுக்கும் நேரம்!.. விஜயின் அரசியல் எண்ட்ரி பற்றி கீர்த்தி சுரேஷ் அடித்த பன்ச்!

by Rohini |   ( Updated:2024-08-21 16:42:51  )
keerthy 1
X

keerthy 1

Actor Vijay: இன்று கோலிவுட்டே மிக ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருப்பது விஜயின் அரசியல் பயணம் பற்றி தான். கோலிவுட்டில் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும்போதே 200 கோடி சம்பளம் வாங்கும் போதே ஒருவர் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வரப் போகிறார் என்றால் அது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. அரசியலில் கூட இந்த அளவு சம்பாதிக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.

அப்படி இருந்தும் இவ்வளவு கோடிகளை விட்டுவிட்டு அரசியலுக்கு விஜய் வருகிறார் என்றால் அது முழுக்க முழுக்க மக்கள் மீது கொண்ட அக்கறையினால் தான் என அவருடைய நலம் விரும்பிகள் கூறி வருகிறார்கள். ஏன் திரை பிரபலங்களும் அதைத்தான் சொல்கிறார்கள். நாளை விஜய் அவருடைய கட்சி கொடியை அறிமுகப்படுத்த இருக்கிறார்.

இதையும் படிங்க: நல்ல வேளை கல்யாணம் பண்ணல! பப்லுவை பற்றி மனம் திறந்த முன்னாள் காதலி

அதற்கான ஆயத்த பணிகள் தான் கடந்த ஒரு வாரமாக நடந்து கொண்டு வருகின்றன. காலை 8 மணியிலிருந்து பத்து மணிக்குள் தனது கட்சி கொடியை அறிவிக்க இருக்கிறார் விஜய். அதற்காக அவருடைய பனையூர் அலுவலகத்தில் கட்சித் தொண்டர்கள் மட்டும் சுமார் 200 இல் இருந்து 250 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.

இன்னொரு பக்கம் அவர் நடித்து ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கும் கோட் திரைப்படத்தின் மீதும் பெருமளவு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இன்னொரு பக்கம் அந்த படத்தில் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் பிளஸ். அதனால் இந்த படம் பெரிய அளவில் வசூலையும் விமர்சனத்தையும் பெரும் என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: தளபதிக்குப் பிறகு இளையராஜாவுடன் இணையாத மணிரத்னம… அவரே சொன்ன காரணம்..!

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்யின் அரசியல் பற்றி சில விஷயங்களை கூறியிருக்கிறார். விஜயுடன் சேர்ந்து பைரவா, சர்க்கார் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். பைரவா திரைப்படத்தின் போது தான் விஜயுடன் ஒரு நெருக்கமான நட்பு ஏற்பட்டதாக கூறினார். அது மட்டுமல்லாமல் அந்த படத்தில் இருந்து விஜய் கீர்த்தி சுரேஷ் அவருடைய மேலாளர் ஜெகதீஷ் பிரியா அட்லி இன்னும் சிலர் ஒரு கேங்காக இருந்து கொண்டு அவ்வப்போது சந்தித்துக் கொள்வார்களாம்.

கீர்த்தி சுரேஷை விஜய் எப்பொழுதும் சுரேஷ் என்றுதான் அழைப்பாராம். இந்த நிலையில் அவர் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது என்றும் மக்கள் அவருக்கு ஏகப்பட்ட அன்பை கொடுத்து விட்டனர். அதை திருப்பிக் கொடுக்கும் நேரம் தான் இது. அதனால் தான் விஜய் இவ்வளவு பேரையும் புகழையும் விட்டுவிட்டு மக்களுக்காக அரசியலுக்கு வருகிறார் என கீர்த்தி சுரேஷ் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: மீண்டும் மணிரத்னத்துடன் கை கோர்க்கும் கமல்!.. செம டிவிஸ்ட்டா இருக்கே!..

Next Story