எந்த நடிகையும் செய்யாத காரியத்தை செய்த குஷ்பூ!.. வாயடைத்துப் போன இயக்குனர்..

by Rohini |   ( Updated:2023-05-09 11:12:57  )
kush
X

khusbhoo

தமிழ் சினிமாவில் 90களின் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. கிட்டத்தட்ட நூறு படங்களுக்கும் மேல் நடித்து கோலிவுட்டின் ஒரு கனவு கன்னியாக வலம் வந்தார். வெள்ளி திரையில் மட்டுமில்லாமல் சின்ன திரையிலும் தன்னுடைய காலடியை எடுத்து வைத்தார். வெள்ளி திரையில் சாதித்த சாதனையை சின்னத்திரையிலும் சாதித்தார்.

kush1

khusbhoo1

நாட்டுப்புறப் பாடலை நன்றாக ஆடுவதில் குஷ்புவை தவிர வேறு எந்த நடிகையும் தமிழ் சினிமாவில் இல்லை என்றே கூறலாம். அதற்கு சான்றாக பல பாடல்கள் அவருடைய சினிமா வாழ்க்கையில் இருக்கின்றன. ஒத்த ரூபாய் தாரேன் ,பஞ்சு மிட்டாய் சேலை கட்டி போன்ற பாடல்களை இன்றும் பார்க்கும்போது நம் நினைவிற்கு வருவது குஷ்பு தான்.

சினிமாவையும் தாண்டி இன்று அரசியலில் படு பிஸியாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார் குஷ்பூ. எந்த தொழிலில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டாலும் குடும்பத் தலைவியாக தன்னுடைய கடமைகளை தவறாமல் நிறைவேற்றி வருகிறார். இவரைப் பற்றி பல கிசுகிசுக்கள் இவர் முன்னணி நடிகையாக இருக்கும் போது பத்திரிகைகளில் வந்து கொண்டே இருந்தன.

kush2

khusbhoo2

குறிப்பாக குஷ்பவையும் பிரபுவையும் இணைத்து பல செய்திகள் வந்து கொண்டே இருந்தன. அந்த அளவிற்கு இருவரின் ஜோடி பொருத்தம் ரசிகர்களை மிகவும் கவர்ந்திழுத்தது. மேலும் இருவரும் சேர்ந்து ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்தனர். இந்த நிலையில் குஷ்புவை பற்றி பிரபல சினிமா இயக்குனர் கஸ்தூரிராஜா ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார்.

குஷ்ப உடன் கிட்டத்தட்ட 9 படங்களில் கஸ்தூரிராஜா பணியாற்றி இருக்கிறாராம். அவர் இயக்கிய எட்டுப்பட்டி ராசா என்ற படத்தில் குஷ்பூ செய்த செயலை நினைத்து மிகவும் மெய் சிலிர்த்து பேசினார் கஸ்தூரிராஜா. ஒரு அடர்ந்த காட்டின் நடுவில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டு இருந்தார்களாம் .மாலை 5.30 மணி ஆகிவிட்டதாம் .சுற்றி பார்த்தாலும் மரங்கள் இல்லையாம் .உடனே ஒரு ஷார்ட் எடுக்க வேண்டி இருந்ததாம் .ஆனால் ஆடை மாற்றிக்கொள்ள இடமே இல்லாமல் தவித்து வந்தனர்.

ஒரு வேளை காலையில் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்தால் 12 கிலோ மீட்டர் சென்று மீண்டும் திரும்பி வர சூழ்நிலை இருந்ததாம். அதனால் என்ன செய்யலாம் என ஒட்டுமொத்த படக்குழுவும் பேசிக் கொண்டிருக்கையில் குஷ்பூ திடீரென வந்து என்ன எல்லோரும் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்? என கேட்டாராம்.

khus3

kasthuri raja

அவர்கள் சொன்னதைக் கேட்ட குஷ்பூ இவ்வளவு தானே! நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறிவிட்டு தன்னுடைய உதவியாளர்கள் நான்கு பேரை அழைத்து சுற்றிலும் ஒரு சேலையை வைத்து மறைத்து நடுவில் குஷ்பூ உடனே தன் ஆடையை மாற்றிக் கொண்டு ஷாட்டுக்கு ரெடி என்று வந்து சொன்னாராம். இதைப் பற்றி குறிப்பிட்டு பேசிய கஸ்தூரிராஜா "குஷ்புவைப் போல இப்ப உள்ள நடிகைகள் செய்ய மாட்டார்கள். எங்களுக்கு தனி அறை வேண்டும் என்று ஒத்த காலில் நிற்பார்கள் .மேலும் குஷ்புவிற்கு வயதாகி விட்டதே என்று வருத்தப்பட்ட முதல் ஆள் நான் தான் "என்றும் கஸ்தூரிராஜா கூறினார்.

இதையும் படிங்க : அழகி பட ஹீரோவா இது?.. இப்ப என்ன பண்ணிட்டு இருக்காரு தெரியுமா?.. ஆளே மாறிட்டீங்களே?..

Next Story